Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

CM MK Stalin: தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் காட்டம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Dec 2025 20:23 PM IST

சென்னை, டிசம்பர் 15, 2025: 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், காந்தியடிகள் மீது உள்ள வன்மத்தால் அவரது பெயரை நீக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரை திணிக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார் என தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் என்ற புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு பெயர் மாற்றம்:

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி வேறு பெயரை வைத்ததற்காக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மசோதாவின் படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற பெயர், விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் என மாற்றப்படுகிறது.

மேலும் படிக்க: கடலூரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..

மகாத்மா காந்தி மீது இருக்கும் வன்மத்தால் பெயர் மாற்றம் – முதல்வர் ஸ்டாலின்:

இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

மேலும் படிக்க: உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..

இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்! பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

3 வேளாண் சட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.