Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடலூரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..

Premalatha Vijayakanth: ஜனவரி 9, 2026 அன்று கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடலூரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Dec 2025 16:37 PM IST

சென்னை, டிசம்பர் 15, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான தேமுதிக, தற்போது அதன் அடுத்த கட்ட அரசியல் நகர்வை அறிவித்துள்ளது.தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது தொடர்பாக ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2026 ஜனவரி 9ஆம் தேதி “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” கடலூரில் பாசார் கிராமத்தில் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். கடலூரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில், அதன் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பின் சந்திக்கவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

மேலும் படிக்க: மூடுவிழா காணும் ஆதி திராவிடர் நல விடுதிகள்…காரணம் என்ன!

விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்:

2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் அதில் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தேமுதிக, அதிமுகவுடன் இணைந்து சந்தித்தது. ஆனால், தேமுதிக கோரிய தொகுதிகள் அதிமுக தரப்பில் வழங்கப்படாததால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அந்தக் கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்ற கேள்விக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது…ஜெயக்குமார் தாக்கு!

கடலூர் மாநாட்டில் முடிவாகும் கூட்டணி கணக்கு:


அந்த வகையில், ஜனவரி 9, 2026 அன்று கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “வருகின்ற ஜனவரி 9, 2026 அன்று நடைபெற இருக்கும் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ கடலூரின் பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது.

நமது மாநாட்டை மிகப் பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தர வேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி. அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” என தெரிவித்தார்.

தவெக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக:

தேமுதிகவைப் பொறுத்தவரையில், புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. விஜய்யும் விஜயகாந்த்தும் அரசியலில் மட்டுமல்ல, சினிமா காலம் தொட்டே நெருங்கிப் பழகியவர்கள் என்றும், “விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை” என பலமுறை பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இந்த சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.