Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? அதன் நிலைப்பாடு என்ன!

DMDK Which Party Will Form An Alliance : 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? அதன் நிலைப்பாடு என்ன!
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 15 Dec 2025 17:17 PM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் படுவேகமாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம், விருப்ப மனு பெறுதல், தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பே அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. திமுகவில் உள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜகவுன் ஒரு படி மேலே சென்று 3 மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது.

அதிமுக மீது அதிருப்தியில் இருந்த தேமுதிக

இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேர்தலை சந்தித்த தேமுதிக கடந்த, மாநிலங்களவை எம்பிகள் தேர்வின் போது, தங்கள் கட்சிக்கு ஒரு சீட் வேண்டும் என்று அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதிமுக, தேமுதிக கேட்ட சீட்டை கொடுக்க மறுத்து விட்டது. இதனால், அதிமுக மீது தேமுதிகவுக்கு அதிருப்தி நிலவி வந்தது. அதே நேரத்தில், திமுகவுடன், தேமுதிக நெருங்கி செல்லும் சூழ்நிலையை பார்க்க முடிந்தது.

பாமகவும் தேவையில்லை…எம்எல்ஏ பதவியும் தேவையில்லை….ஜி. கே. மணி ஆவேசம்!

திமுகவுடன் கூட்டணி அமைக்குமா தேமுதிக

அப்போது, திமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதற்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை. இதனிடையே, தேமுதிக பங்கேற்கும் கூட்டணி மாபெரும் கூட்டணி என்றும், அந்தக் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால், மாநிலங்களவை சீட் கேட்டும் கொடுக்காத அதிருப்தியில் இருந்து வரும் தேமுதிக, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது அதிமுகவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தேமுதிகவின் கூட்டணி-தொகுதி பங்கீடு முடிவு

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போது வரை தேமுதிக கூட்டணி விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் தேமுதிக தோழமையுடன் உள்ளது. தேமுதிகவின் கூட்டணி நிலைபாடு குறித்து அடுத்த மாதம் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் கட்சியில்

மேலும், தேமுதிக போட்டியிடும் தொகுதியின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தார். இதனால், எந்த கட்சி அதிக தொகுதிகள் கொடுக்கிறதோ, அந்தக் கட்சியின் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், மீண்டும் அதிமுக கூட்டணியில் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க: அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது…ஜெயக்குமார் தாக்கு!