“அன்புமணி விருப்ப மனு பெறுவது மோசடி வேலை”.. யாரும் ஏமாற வேண்டாம்.. ராமதாஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
PMK internal issue: பாமகாவுக்காக ராமதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சிறைக்கு சென்றதாகவும் தெரிவித்த அவர், அன்புமணி எத்தனை முறை சிறைக்கு சென்றார் என்றும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்குமாறு கூறி ராமதாஸை தானே சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவத்தார்.
அன்புமணி விருப்ப மனு பெறுவது மோசடி வேலை என்றும் பாமகவினர் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரும், பாமக கவுரவத் தலைவருமான ஜி.கே.மணி கேட்டுக்கொண்டுள்ளார். அன்புணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிப்பதாகவும், அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ் என்றும், அவரைப்போய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அன்புமணி கூறுவது அநாகரிகமானது எனவும் வேதனை தெரிவித்துள்ளார். வாயை திறந்தாலே அன்புமணி பொய் பேசுவதாகவும், பாமகவில் இவ்வளவு பிரச்சனை நடக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் விருப்ப மனு பெறுவதாகவும் அவர் சாடியுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில், தந்தை, மகன் இரு தரப்புகளாக பிரிந்து மோதி வருவது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
நேரில் சந்தித்த அன்புமணி, ஜி.கே.மணி:
முன்னதாக நேற்றைய தினம், பாமக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஏ.கே. மூர்த்தியின் மகன் விஜய் மகேஷ் – நிவேதா ஆகியோரின் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். ராமதாஸின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி திருமண விழாவிற்கு வருகை தந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ராமதாஸ் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதேநேரம் ராமதாஸின் ஆதரவாளரும், பாமக கவுரவத் தலைவருமான ஜி.கே.மணியும், அன்புமணியும் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.




தந்தை, மகன் சேர்ந்து பேச வேண்டும்:
இந்நிலையில், இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, பாமகவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தந்தை, மகன் இரண்டு பேரும் சேர்ந்து பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையுடன் சேர்ந்து செயல்படுவேன் என அன்புமணி கூறிவிட்டால், அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். மேலும், பாமக, ராமதாஸ், அன்புமணிக்காக தான் நீண்ட நாள் உழைத்து வருவதாக கூறிய அவர், அன்புமணி எப்படி யாரால் அமைச்சரானார் என்று அவர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் பிறப்பு விகிதம் கடும் சரிவு.. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஷாக் ரிப்போர்ட்!!
அன்புமணி எத்தனை முறை சிறைக்கு சென்றார்?
அதோடு, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்குமாறு கூறி ராமதாஸை தானே சம்மதிக்க வைத்ததாகவும், ராமதாஸ் முதலில் இதை கேட்டதும் மிகவும் கோபம் கொண்டதாகவும் தெரிவத்தார். அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதல் நினைக்கவில்லை, துரோகம் நினைக்கவில்லை என்று தெளிவுப்படுத்திய அவர், ராமதாஸ் உடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக அன்புமணி தன்னை வசைபாடுவதாகவும் கூறினார்.
மேலும், பாமகாவுக்காக ராமதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சிறைக்கு சென்றதாக கூறிய அவர், அன்புமணி எத்தனை முறை சிறைக்கு சென்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.