2026 சட்டமன்ற தேர்தல்: 3 பேர் கொண்ட குழுவை இறக்கிய பாஜக!
3 Union ministers appointed as Tamil Nadu BJP election in charges: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக பாஜகவைச் சேர்ந்த 3 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை கட்சியின் தேசிய தலைவர் நியமித்துள்ளார். தேர்தல் பொறுப்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வலுவாக காலூன்றுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களாக மூன்று மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல, இணை பொறுப்பாளர்களாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா வெளியிட்டுள்ளார். இவர்கள் கடந்த 2014, 2019, 2021 ஆகிய தேர்தலில் பாஜக சார்பில் முக்கிய பங்காற்றி இருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா அறிவிக்கப்பட்டார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.
பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட காரணம்
இந்த நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக பெரிய அளவில் வெற்றியை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படியே, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மூன்று முக்கிய அமைச்சர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. தமிழகம் சார்ந்த பல்வேறு நகர்வுகளை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து பியூஸ் கோயல் மேற்கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: டெல்லியில் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை.. அதிமுகவிடம் 54 தொகுதிகள் கேட்க முடிவு!!




நிர்மலா சீதாராமனும் விரைவில் ஈடுபட உள்ளார்
கடந்த 2019 தேர்தலில் அப்போது இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து அதிமுக பாஜக கூட்டணி வெற்றி வியூகங்களை வகுத்ததில் அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் பணிகளில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் ஈடுபட உள்ளார். தமிழகத்தில் நேரடியாக மூன்று மத்திய அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டது தமிழக சட்டமன்ற தேர்தலை பாஜக முக்கிய தேர்தலாக பார்ப்பது தெரிகிறது.
அதிமுக-பாஜக இடையே பாலமாக…
பியூஸ் கோயலை பொறுத்தவரை, அவர் பொறுப்பாளராக நியமிக்கப்படும் மாநிலங்களில் கூட்டணி தொடர்பான விவகாரங்கள் முதல் வெற்றி வரை அனைத்து விஷயங்களையும் நுட்பமாக மேற்கொள்ளக் கூடியவர் ஆவார். அதிமுகவிடம், பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்கும் முடிவில் இருக்கும் நிலையில், அதற்கு தக்க பாலமாக அமைச்சர் பியூஸ் கோயல் இருப்பார் என்று பாஜக நம்புகிறது.
மேலும் படிக்க: “அன்புமணி விருப்ப மனு பெறுவது மோசடி வேலை”.. யாரும் ஏமாற வேண்டாம்.. ராமதாஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு