ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம்.. பாஜகவை சாடிய முதலமைச்சர்!
Tamil Nadu CM MK Stalin Speech | திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14, 2025) திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலை, டிசம்பர் 14 : அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடங்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) பாரதிய ஜனதா கட்சியை (BJP – Bharatiya Janata Party) விமர்சனம் செய்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரை குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (டிசம்பர் 14, 2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மூத்த அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கட்சிக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. லட்சக்கணக்கான இளைஞர்கள் கட்சியில் சேர்த்தார். அவரை கொள்கை ரீதியாக வலுவாக்க பாசறை கூட்டங்களை நடத்தினார் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய்க்கு அனுமதி.. மாவட்ட எஸ்பி உத்தரவு!




தமிழ்நாட்டை வெல்ல முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டையும், தமிழையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் இறையான்மையையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பீகாரை தொடர்ந்து அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்கிறார் அமித்ஷா. அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். இந்தியாவிலேயே சித்தாந்த ரீதியாக போரிடும் கட்சி திமுக. எங்கள் கேரக்டரையே புரிந்துக்கொள்ளவில்லையே. உங்களை நிச்சயம் வென்று காட்டுவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க : “வேட்பாளர்களை விஜய் தான் அறிவிப்பார்”.. நிர்வாகிகளுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு
இளைஞரணிக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்
அரசியலில் சொகுசு எதிர்ப்பார்க்காதீர்கள். கடுமையாக உழைப்பவர்களுக்கே இங்கு இடம் கிடைக்கும். உதயநிதியும் இதையேதான் செய்கிறார். உங்களிடமும் இதையே தான் எதிர்ப்பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.