Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொங்கலுக்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?.. விவசாயிகளுடன் கொண்டாட திட்டம்!!

கடந்த 2024ம் ஆண்டில் டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை மீனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

பொங்கலுக்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி?.. விவசாயிகளுடன் கொண்டாட திட்டம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Dec 2025 15:50 PM IST

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையுடன் இணைத்து அவரின் வருகையை திட்டமிடுகிறார்கள்; இது மூன்று நாட்கள் (ஜனவரி 13 முதல் 15) பயணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்களை இறுதி செய்வதும், கூட்டணியை முடிவு செய்வதுமாக பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதில், பாஜக போன்ற கட்சிகள் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்பதை கூட கூட்டணி கட்சிகளிடம் கேட்க தொடங்கிவிட்டன.

மேலும் படிக்க: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்.. இன்றே கடைசி நாள்..

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் தேர்தல் பணிகள்:

இந்தளவுக்கு அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக செயல்படுகிறது என்றால், மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதில், பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்ள ஜனவரி மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். இப்படியாக, அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை முடுக்கியுள்ளன.

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார் மோடி:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, ஜனவரி 13ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார். அதோடு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற முழக்கத்துடன் தற்போது மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு விழாவிலும் மோடி பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாடும் வகையிலும் திட்டமிடப்பட்டு வருகிறது.

கூட்டணிய கட்சிகளுடன் ஆலோசிக்கவும் வாய்ப்பு:

மேலும், பிரதமர் மோடி வருகையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) மாநில அளவிலான நிலை குறித்து அறிய உள்ள அவர், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு, தேர்தலுக்கு தேவையான அம்சங்கள் குறித்தும் அவர் தீர்மானிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர்கள் இதை அரசியல் நகர்வாகவும், 2026 தேர்தலில் அவர்களின் பலத்தை அதிகரிக்கும் முயற்சியாகவும் கருதுகிறார்கள். இந்த பயணம் அரசியலும், பொது தொடர்புகளும் கலந்த நிகழ்வாக அமைகிறது.

மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

பொதுக்கூட்டங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள், பொங்கல் விழாவின் மத உணர்வுகளுடன் கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் அதன் பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.