Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிவேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்…தமிழகத்துக்கு அலர்ட்!

Scrub Typhus Fever Precautionary: ஆந்திரா மாநிலத்தில் பரவி வரும் ஸ்கிரப் டைபஸ் என்ற உண்ணி காய்ச்சல் தமிழகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது .

அதிவேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்…தமிழகத்துக்கு அலர்ட்!
ஸ்கிரப் டைபஸ் காய்ச்சல் பரவல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Dec 2025 14:44 PM IST

ஆந்திராவில் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் (ஸ்கிரப் டைபஸ்) உண்ணி காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது தமிழகத்திலும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த காய்ச்சலுக்கு தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஸ்கிரப் டைபஸ் என்பது பாக்டீரியா தொற்றாகும். ரிக்கட்சியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது அவர்களுக்கு உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, உடல் சோர்வுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். இவை முக்கிய அறிகுறிகளாகும்.

ஸ்கிரப் டைபஸ் காய்ச்சல் தொற்றால்

இந்தக் காய்ச்சலால் ஆண்டுதோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் திருவண்ணாமலை, வந்தவாசி அருகே உள்ள மலைப் பகுதிகளும், செடி, கொடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தற்போது, சென்னை போன்ற நகர பகுதிகளிலும் ஸ்கிரப் டைபஸ் என்ற உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஐநாவின் உயரிய விருதை வென்ற சுப்ரியா சாகு… முதல்வர் பாராட்டு

ஆந்திராவில் 1,592 பேருக்கு காய்ச்சல் தொற்று

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் 1,592 பேருக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் இந்தக் காய்ச்சலால் 420 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 9 பேர் ஸ்கிரப் டைபஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்கிரப் டைபஸ் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ள சூழ்நிலையில், தமிழகத்திலும் இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை

இதற்காக, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள தேவையில்லாத செடி மற்றும் கொடிகளை அகற்றி சுற்றுப் புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் தம் உடல் மீது படாதவாறு தற்காத்துக் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணி காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானது. பின்னர், காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஸ்கிரப் டைபஸ் காய்ச்சல் பரவி வருவது பொது மக்கள் மத்தியில் மரண பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு…என்ன காரணம்!