கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி lower berth தானாக கிடைக்கும்.. இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு..
Train Ticket Booking: 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும் வகையில் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அவர்கள் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும்.
டிசம்பர் 9, 2025: இந்திய ரயில்வேயில் மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு ரயில்களில் படுக்கை ஒதுக்கீட்டுத் தொடர்பாக புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுவாக ரயில்களில் ‘லோயர் பெர்த்’ எனப்படும் கீழ்படுக்கை கிடைப்பது சற்று கடினமாகும். இதற்காக பலரும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். அதில் சிலருக்கே லோயர் பெர்த் கிடைக்கும். ஆனால், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மிடில் பெர்த் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்படும் போது, அதில் ஏறி படுப்பதற்கு சிரமங்கள் இருக்கும். எனவே, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய விதிகளை இந்திய ரயில்வே தரப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்:
45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும் வகையில் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அவர்கள் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் கீழ்படுக்கைகள் தானாகவே ஒதுக்கப்படும்.
மேலும் படிக்க: ஆசை ஆசையாக கோழிக்கறி குழம்பு சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்.. தொண்டையில் சிக்கி பரிதாப பலி!
ஒவ்வொரு பெட்டியிலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டின் கீழ் அவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படும். ஸ்லீப்பர் பெட்டிகளில் 6 முதல் 7 கீழ்படுக்கைகள், 3-வது ஏசி பெட்டியில் 4 முதல் 5 வரை, 2-வது ஏசியில் 3 முதல் 4 கீழ்படுக்கைகள் இவர்களுக்கு ஒதுக்கப்படும்.
அதே சமயத்தில், தனித்துவமான விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்காக சிறப்பு முன்பதிவு ஒதுக்கீடு இருக்கும். இதில் நான்கு படுக்கைகள் — இரண்டு கீழ்படுக்கைகள் மற்றும் இரண்டு மிடில் பெர்த்கள் — ஒதுக்கப்படும். அதேபோல் நான்கு இருக்கைகளும் ஒதுக்கப்படும்.
மேலும் படிக்க: போலி மருந்து விவகாரம்…தமிழகத்தில் 34 மருந்தகளை ஆய்வு செய்ய உத்தரவு!
சிறப்பு பெட்டிகளில் இருக்கும் அம்சங்கள் என்ன?
அனைத்து விரைவு ரயில்களிலும் சிறப்பு பெட்டிகள் இருக்கும். இந்த பெட்டிகளில் அகலமான நுழைவு கதவுகள், பெரிய படுக்கைகள், விசாலமான கழிப்பறைகள், சக்கர நாற்காலி பார்க்கிங் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வைக்குறைபாடுள்ள பயணிகளுக்காக பிரெயில் அடையாளங்களும் இடம்பெற்றிருக்கும்.
வந்தே பாரத் ரயில்களின் முதல் மற்றும் கடைசி பெட்டிகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எளிதாக ஏறவும் இறங்கவும் சாய்வு பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகளும் வழங்கப்பட்டுள்ளன.