ஆசை ஆசையாக கோழிக்கறி குழம்பு சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்.. தொண்டையில் சிக்கி பரிதாப பலி!
Auto Driver Died Of Chicken Piece | ஹைதராபாத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியிடம் ஆசை ஆசையாக சிக்கன் குழம்பு கேட்டுள்ளார். அவரும் சிக்கன் குழம்பு சமைத்து வைத்த நிலையில், அதனை அவசர அவசரமாக சாப்பிட்ட ஓட்டுநர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
ஹைதராபாத், டிசம்பர் 09 : தெலங்கானா (Telangana) மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கொலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர். 45 வயதாகும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 07, 2025 அன்று தனது மனைவியிடம் சிக்கன் குழம்பு வைத்து தர கூறி கறி வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துள்ளார். கணவர் ஆசைப்பட்டு கேட்ட நிலையில், அவரது மனைவியும் கோழிக்கறி குழம்பு வைத்துவிட்டு கணவருக்காக காத்திருந்துள்ளார்.
அவசர அவசரமாக சாப்பிட்ட நிலையில் தொண்டையில் சிக்கிய கோழிக்கறி
இந்த நிலையில், அதிக பசியோடு வீட்டுக்கு வந்த சுரேந்தர் கோழிக்கறி என்பதால் மிகுந்த ஆசையுடன் சாப்பிட்டுள்ளார். நல்ல பசியில் இருந்த அவர் உணவை வேக, வேகமாக சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில், கோழிக்கறி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது. அவர் அதனை எப்படியாவது விழுங்கிவிட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் அந்த கோழிக்கறி துண்டை விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல் போயுள்ளது. இதனால் பயந்துப்போன சுரேந்தர் தவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரூ. 610 கோடி ரீஃபண்ட்.. 3000 லக்கேஜ் ரிட்டர்ன்… இயல்பு நிலைக்கு திரும்பும் இண்டிகோ!
மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்
எவ்வளவு முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கிய கோழிக்கறி துண்டை வெளியே எடுக்க முடியாததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுரேந்தர் கோழிக்கறி துண்டு தொண்டையில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை கண்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
முட்டை தொண்டையில் சிக்கிய பலியான நபர்
சுரேந்தர் வசித்து வந்த அதே மாவட்டத்தில் ஒருவர் முட்டை சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அது தொண்டையில் சிக்கி அவரும் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். உணவை பொறுமையாக, மென்று சாப்பிட் வேண்டும். அதுதான் செரிமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது செரிமானம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட சிக்கல்களை உருவாக்கி உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.



