Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Udhayanidhi Stalin: திருவண்ணாமலையில் டிசம்பர் 14, 2025 அன்று திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Dec 2025 20:11 PM IST
திருவண்ணாமலையில் (Tiruvannamalai) டிசம்பர் 14, 2025 அன்று திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாடு இல்லாமல் 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் பயனில்லை. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது என்று பேசினார்.

அதிமுக மீது விமர்சனம்

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் அதிமுக மீதான விமர்சனத்தை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், கார் பேட்டரி டவுனானால், 4 பேர் அதை தள்ளி ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால் காரில் இஞ்சினே இல்லையென்றால், எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. அப்படி என்ஜின் இல்லாத கார் தான் அதிமுக. பாஜக என்கிற லாரி என்ஜின் இல்லாத காரை இழுத்துக்கொண்டு செல்ல பார்க்கிறது என்றார்.

திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி பேச்சு

மேலும் பேசிய அவர், வானவில் கலர் கலரா அழகா இருக்கும். அதைப் பார்ப்பதற்கு மக்கள் நிறைய பேர் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல. உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம். கட்டுப்பாடு இல்லாமல் 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் பயனில்லை. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றார்.

‘சிலர் திமுகவை மிரட்டி பார்க்கின்றனர்’

திமுகவை சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அடுத்து எங்கள் இலக்கு தமிழ்நாடு என அமித் ஷா பேசுகிறார். நீங்கள் எவ்வளவு சீண்டினாலும் அதை எதிர்கொள்ள திமுக இளைஞரணி களத்தில் தயாராக இருக்கும். அண்ணா கட்சியை ஆரம்பிக்கும்போது டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்க வருவதாக கூறினார். அன்று முதல் இன்று வரை தமிழகத்தை காப்பதற்கான போர்க்களத்தில் முன் வரிசையில் திமுக இருக்கிறது. போர்க்களத்தில் எதிரிகள்தான் மாறினார்களே தவிர திமுக அதே வலிமையுடன்தான் இருக்கிறது.

தமிழ் மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திமுக.எனவே மிரட்டி பணிய வைப்பது நிச்சயம் நடக்காது ீகார், த்தரப்பிரதேசத்தில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். தமிழ்நாட்டில் அது நிச்சயம் நடக்காது. பாஜக மதம்பிடித்த யானை என நினைக்கலாம்; அந்த யானையை அடக்கும் அங்குசம் நம் தலைவர் கையில் உள்ளது. இது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தெரியும் என்பதால் பழைய, புதிய அடிமைகளை கூட்டிக் கொண்டு வருகின்றனர். நாம் தொடர்ந்து மக்களோடு இருக்கிறோம். மக்களும் நம்முடன் இருக்கின்றனர்.