Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வர், துணை முதல்வர் கலந்துக்கொள்ளும் திமுக இளைஞரணி சந்திப்பு.. திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்..

DMK Youth Wing Meet: திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக, டிசம்பர் 13, 2025 தேதியான நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர், துணை முதல்வர் கலந்துக்கொள்ளும் திமுக இளைஞரணி சந்திப்பு.. திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Dec 2025 07:10 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 14, 2025: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கலைஞர் திடலில், திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. பிரச்சாரம் மேற்கொள்வது, மக்களை சந்திப்பது, ஆலோசனைக் கூட்டங்கள், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனுடன், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் திமுக:

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக தரப்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப மகள்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதேபோல், “ஒரணியில் தமிழ்நாடு – உங்களுடன் ஸ்டாலின்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத்திட்டங்கள், புதிய மேம்பாலங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு:


திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக, டிசம்பர் 13, 2025 தேதியான நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இந்திய கடற்படை மாரத்தான் 2025.. அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம்..

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “திருவண்ணாமலைக்கு வரும் திமுக வடக்கு மண்டலத்தின் ‘நியூ திராவிடன்ஸ்’ you are welcome. நம் எல்லோரையும் ‘உடன்பிறப்புகள்’ என்று அழைக்கக் காரணம் என்னவென்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உறவுகள் இருப்பதைப் போல, கழகத்திலும் அனைவரும் பாச உணர்வுடன் பழக வேண்டும் என்பதற்காகவே ‘உடன்பிறப்பே’ என்ற உறவை கொண்டாடுகிறோம். இந்தியாவிலேயே இன்றைக்கு தமிழ்நாடு தனித்தன்மையுடன் உள்ளது. அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியை நீங்கள் முன்னெடுத்து செல்லப் போகிறீர்கள் என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் ஏ.வ வேலு:

அதேபோல், தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு இது தொடர்பாக கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி கடிதம் அளித்தபோது, 17 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், ஏழு துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்பட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 500 வேன் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு வரக்கூடிய நிர்வாகிகள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவோர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்லவும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையிலும், மூன்று இணைப்பு சாலைகளில் இரண்டு வழி புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.