Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்திய கடற்படை மாரத்தான் 2025.. அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம்..

CMRL Operation: இந்திய கடற்படை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் எளிதாக கலந்து கொள்ளும் வகையிலும், எந்த சிரமமும் இன்றி, போக்குவரத்து இடையூறு இல்லாமல் கலந்து கொள்ளும் வகையிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை மாரத்தான் 2025.. அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Dec 2025 20:10 PM IST

சென்னை, டிசம்பர் 13, 2025: டிசம்பர் 14, 2025 இந்திய கடற்படை மாரத்தான் 2025 நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை மட்டும் இந்த மெட்ரோ ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பாக அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை, காலை 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை சார்பில் இந்த மாரத்தான் நடத்தப்படுகிறது.

அதேபோல், இந்திய கடற்படை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் எளிதாக கலந்து கொள்ளும் வகையிலும், எந்த சிரமமும் இன்றி, போக்குவரத்து இடையூறு இல்லாமல் கலந்து கொள்ளும் வகையிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 5 மணி அளவில் தொடங்கி, இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிமுக பாஜக தொகுதி பங்கீடு.. இத்தனை தொகுதிகளா? ஷாக்கான அதிமுக தலைமையகம்..

இந்திய கடற்படை மாரத்தான் 2025:


இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்திய கடற்படையானது, பொதுமக்கள் மத்தியில் கடற்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியை மேம்படுத்துதல், பெண்களின் பங்கேற்பு மற்றும் பாலின சமத்துவத்தை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் போன்ற தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய கடற்படை சென்னையில் முதன்முறையாக மாரத்தான் நிகழ்ச்சியை நடத்ததிட்டமிட்டுள்ளது.

இந்திய கடற்படையை போற்றும் விதமாக “இந்திய கடற்படை ஹாஃப் மாரத்தான் 2025” நிகழ்வை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் நாளான 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சிறப்பு ஏற்பாடாக சென்னை மெட்ரோ இரயில் சேவை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்படும்.

பொதுமக்கள் கவனத்திற்கு:

  •  14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்படும்.
  •  அதிகாலை 3:00 மணி முதல் காலை 5:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  •  புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி இரயில் சேவை காலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை இயங்காது. மேற்கண்ட நேரங்களில் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம்.
  •  ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி வழக்கமான இரயில் சேவைகள் காலை 5:00 மணி முதல் இயக்கப்படும். புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ இரயில் சேவைகளும் காலை 5:00 மணி முதல் வழக்கம் போல் இயங்கும்.
  •  அனைத்து பயணிகளும் மாரத்தான் பங்கேற்பாளர்களும், மெட்ரோ இரயில் நிலைய பயணச்சீட்டு கவுண்டர்கள் மற்றும் online தளங்கள் மூலம் மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கலாம். (சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் Online மூலம் பயணசீட்டு பெறும் அனைத்து வசதிகளும் அன்று செயல்படும்).
  •  மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டணங்கள் தற்போதுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் விதிமுறைகளின் படி வசூலிக்கப்படும்.
  •  பயணிகள் தங்கள் பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த சிறப்பு சேவையை திறம்படப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.