Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சி டூ சென்னைக்கு ஏர்பஸ் விமான சேவை…எப்போது இயக்கம் தெரியுமா!

Trichy To Chennai Airbus Flight Service: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏர்பஸ் விமான சேவை நாளை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையானது டிசம்பர் 31- ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி டூ சென்னைக்கு ஏர்பஸ் விமான சேவை…எப்போது இயக்கம் தெரியுமா!
திருச்சி டூ சென்னை ஏர்பஸ் விமான சேவை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 15 Dec 2025 14:38 PM IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம் ஏ. டி. ஆர். வகையான விமானங்கள் மூலம் இயக்கி வருகிறது. இதில், தினம்தோறும் திருச்சியில் இருந்து சென்னைக்கு 6 முறை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி காலை 7: 35, 10: 35, பிற்பகல் 12: 40, 2: 55, இரவு 7: 45, 10: 15 உள்ளிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏ. டி. ஆர் ரக விமானத்தில் 76 பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். இந்த நிலையில், இந்த சேவைகளில் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் ஏர்பஸ் விமான சேவை தொடக்கம்

அதன்படி, காலை 10: 35 மற்றும் மாலை 5: 55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு விமான சேவைகளை மட்டும் நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை ஏர்பஸ் விமானங்களை இயக்கப்பட உள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் இயக்கப்படும் இந்த ஏர்பஸ் விமானங்களில் சுமார் 150 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த சேவைகளை தவிர்த்து, மற்ற விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ஊட்டியில் உறைபனி.. சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டம்.. புலம்பும் பொதுமக்கள்!

அதிக இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானம்

ஏர்பஸ் விமான சேவையால் இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானங்கள் சேவை வழங்கப்பட உள்ளது. எதிர் வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட இடையூறு

அண்மை காலமாக இண்டிகோ நிறுவனத்தில் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட குளறுபடி காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திலும் இண்டிகோ விமானங்கள் முன் அறிவிப்பின்றி திடீரென அதிக அளவில் ரத்து செய்யப்பட்டன. இந்த சேவைகள் தற்போது வரை சீரான முறையில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து வரும் பண்டிகைகள்

இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் விமான பயணிகளின் நலன் கருதி இன்டிகோ நிறுவனம் சார்பில் ஏர்பஸ் விமான சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்பஸ் விமான சேவை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: காதல் விவகாரம்.. பெண் காவல் ஆய்வாளர் விபரீத முடிவு.. பரிதவிக்கும் குழந்தைகளால் சோகம்!!