AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. 110 பாரன்ஹீட் வரை நெருங்கும் வெப்பம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Agni Natchathiram Starts From May 04 2026 | கோடைக்காலத்தில் மிகவும் சவாலான காலக்கட்டமாக இருப்பது தான் அக்னி நட்சத்திரம். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 04, 2026) தொடங்க உள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. 110 பாரன்ஹீட் வரை நெருங்கும் வெப்பம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 May 2026 08:50 AM IST

சென்னை, மே 03 : தமிழகத்தில் (Tamil Nadu) 2026 ஆம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram) நாளை (மே 04, 2026) முதல் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மே 28, 2026 வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எவ்வாறு இருக்கும், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை காரணமாக மிக கடுமையான வெயில் இருக்கும். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத வகையில், சூரியன் சுட்டெரிக்கும். வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் ஏப்ரல் மாத தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் அணல் காற்று வீசும் நிலையில், அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்மார்ட் போன் ரூபத்தில் வந்த எமன்.. மொட்டை மாடியிலிருந்து விழுந்த இளைஞர்.. தீவிர சிகிச்சையில் பிரிந்த உயிர்!

110 பாரன்ஹீட் வரை நெருங்கும் வெப்பம்

தமிழகத்தில் கோடைக்காலத்தில் மிகவும் சவாலான சூழல் தான் கத்தரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம். இந்த காலக்கட்டத்தில் மிக கடுமையான வெப்பம் நிலவும். இந்த நிலையில், நாளை முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், வெப்பநிலை 110 பாரன்ஹீட் வரை செல்லக்கூடும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 100 டிகிரி வரை பாரன்ஹீட் பதிவாகியுள்ள நிலையில், நாளை முதல் அக்னி வெயில் காரணமாக 110 பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு.. மத்திய அரசின் நீண்ட கால திட்டம் வேண்டும்.. பெ.சண்முகம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிலவும் இந்த 24 நாட்களில் அதிகப்படியான வெப்பத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்கள் எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். எனவே தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெயிலுக்கு உகந்த ஆடைகள் அணிய வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us