தீயை அணைக்க உதவிய இளைஞர்கள் – திடீரென சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் – காஞ்சிபுரம் அருகே சோகம்
காஞ்சிபுரம் அருகே ஜூன் 16, 2026 புதிதாக கட்டி வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழ் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்திருக்கிறது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காஞ்சிபுரம், ஜூன் 16 : காஞ்சிபுரம் அருகே ஜூன் 16, 2026 புதிதாக கட்டி வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழ் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்திருக்கிறது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தத்தனூர் என்ற ஊரில் முருகன் என்பவர் தனது வீட்டின் மேலே புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 16, 2026 அன்று அதிகாலை புதிதாக கட்டி வந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த தீயை அணைக்கும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீ மெல்ல கீழ் தளத்தில் பரவியிருக்கிறது. இந்த நிலையில் பரவிய தீ காரணமாக கீழ் வீட்டில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்திருக்கிறது. இதில் தீயை அணைக்க முயற்சித்த 7 இளைஞர்களும் படுகாயமடந்துள்ளனர்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்
இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரகடம் காவல்துறையினர் புதிதாக கட்டி வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் அருகே நாவலூர் என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது வீட்டில் சமைத்து தனியார் மேன்சன்களுக்கு சப்ளை செய்து வந்திருக்கிறார். இதனால் அவரது வீட்டில் எப்பொழுதும் 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருப்பது வழக்கம்.
இதையும் படிக்க : ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் கடந்த மார்ச் 16, 2026 அன்று நள்ளிரவில் எரிவாயு கசிவு வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த வைரமுத்து தூக்க கலக்கத்தில் மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் வைரமுத்துவின் மகன் உட்பட அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த சஞ்சீவ் குமார் என்பவரின் மகள் கிருஷிகா மற்றும் மகன் தீரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 7 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.