AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MI vs GT – திலக் வர்மா அதிரடி சதம் – குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

IPL 2026 : ஐபிஎல் 2026 தொடரில் 30வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த நிலையில் திலக் வர்மாவின் அதிரடி சதம் காரணமாக குஜராத் 199 ரன்கள் குவித்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரன்களுக்குள் சுருண்டது.

MI vs GT – திலக் வர்மா அதிரடி சதம் – குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
திலக் வர்மா - பும்ரா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Apr 2026 23:09 PM IST

2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 30வது போட்டியில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், 6வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி ஏப்ரல் 20, 2026 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திலக் வர்மா 45 பந்துகளுக்கு 7 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகள் என 101 ரன்கள் குவித்தார். இது இந்த ஐபிஎல்லில் அவரது முதல் சதமாகும்.

அந்த அணியின் மற்றொரு வீரரான நமன் திர் 32 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. குறப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அவர் இந்த இந்த போட்டியில் ஒரு அரிய சாதனை படைத்தார். அதன் படி இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்திருந்த போது அவர் 2000 ரன்களைக் கடந்தார்.

இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிராக சைகை.. கடுப்பாக்கிய காவ்யா மாறன்!

முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கா 2000 ரன்களைக் கடந்த 7வது வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 6000 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

மும்பை அபார வெற்றி

 

இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அந்த அணியின் சாய் சுதர்சன் முதல் பும்ரா வீசிய முதல் பந்திலேயே கிரிஷ் பகத்திடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா இந்த ஐபிஎல் 2026 சீசனில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கேவுக்கு தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்தால் பரபரப்பு!

மேலும் சுப்மன் கில் 14 ரன்கள், ஜோஸ் பட்லர் 5 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள், கிளென் பிளிப்ஸ் 6 ரன்கள், ராகுல் தேவாட்டியா 8 ரன்கள் என அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 11 ஓவர்கள் முடிவில் 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

 

 

Follow Us