AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிராக சைகை.. கடுப்பாக்கிய காவ்யா மாறன்!

Chennai Super Kings: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்குப் பிறகு காவ்யா மாறன் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். அவரது கொண்டாட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காவ்யா தனது வெற்றியைக் கொண்டாட எழுந்து நின்று, ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். 

IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிராக சைகை.. கடுப்பாக்கிய காவ்யா மாறன்!
காவ்யா மாறன்Image Source: Screengrab
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2026 15:43 PM IST

2026 ஏப்ரல் 19ம் தேதியான நேற்று ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 27வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பெற்ற இந்த வெற்றிக்குப் பிறகு, ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாரன், பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு எதிராக ஒரு சைகை செய்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ALSO READ: மீண்டும் தோல்வியில் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல் நிலைமை என்ன?

வாயில் விரலை வைத்து சைகை:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்குப் பிறகு காவ்யா மாறன் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். அவரது கொண்டாட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காவ்யா தனது வெற்றியைக் கொண்டாட எழுந்து நின்று, ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.  கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் தனது விரலை வாயின் மீது வைத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.

ரசிகர்களை முறைத்துப் பார்த்து, தன் விரலை வாயில் வைத்த காவ்யாவின் செய்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சென்னை ரசிகர்களை அமைதிப்படுத்த அவர் இப்படியான செய்கையைப் பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஹைதராபாத் இணை உரிமையாளரின் இந்தச் செயல்கள் சென்னை ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, ஹைதராபாத் அணி பந்துவீசும்போது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ஹைதராபாத் ரசிகர்கள் சிலர் கையில் எலுமிச்சை வைத்து மந்திரம் செய்ததுபோலவும் சில அதிர்ச்சிகரமான வீடியோக்களை காண முடிந்தது. இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளது.

போட்டியில் என்ன நடந்தது..?


சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதுமட்டுமின்றி, ஹென்ரிச் கிளாசனும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை சென்னை அணிக்காக கைப்பற்றினர்.

ALSO READ: சிஎஸ்கேவுக்கு தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்தால் பரபரப்பு!

195 ரன்களை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியபோது 8.5 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தனர். அதிலிருந்து, வெற்றி தவிர்க்க முடியாததாகத் தோன்றியது. இருப்பினும், அப்போது சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். பின்னர், சென்னையின் தொடர்ச்சியான விக்கெட் இழப்பு படிப்படியாக ஒரு பிரச்சனையாக மாறியது. இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Follow Us