India vs Sri Lanka Women, Asian Games Final Live : தங்கப்பதக்கம் யாருக்கு? வெல்வார்களா இந்திய மகளிர் டீம்?
INDW vs SL-W, Asian Games Gold Medal Final Live Score Updates in Tamil : இந்திய மகளிர் அணி அடுத்த இலக்கை குறி வைத்து களம் இறங்கவுள்ளது. இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இது தொடர்பான அப்டேட்களை பார்க்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியனாகும் வாய்ப்பு
20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 3வது நாளில், மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தங்கப் பதக்கத்திற்கான இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன. அரையிறுதியில் இந்தியா வங்காளதேசத்தையும், இலங்கை பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இந்த போட்டியில் வென்றால் 2வது முறையாக தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
-
இலங்கை மகளிர் அணியின் வீராங்கனைகள் பட்டியல்
இலங்கை அணியில் இமேஷா துலானி, சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா தில்ஹாரி, ஹன்சிமா கருணாரத்னே, கவுஷானி நுத்யங்கனா (விக்கெட் கீப்பர்), மிதாலி அயோத்யா, காவ்யா கவிந்தி, சாமுடி பிரபோதா, சுகந்திகா குமாரி, ரஷ்மிகா செவ்வந்தி, நிமாஷா மீபாகே, சஞ்சனா கவிந்தி மற்றும் அனுஷ்கா சஞ்ஜீவனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் பட்டியல்
இந்தியா அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, குணாலன் கமலினி, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பாரதி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பாட்டில், ஸ்ரீ சரணி, நந்தனி சர்மா, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெறும் இடம்!
இந்தியா – இலங்கை இடையேயான ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஜப்பானின் நிசின் நகரில் உள்ள கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்போது இந்திய அணி, தங்கப் பதக்கத்திற்காக இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்ளும். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி செப்டம்பர் 22ம் தேதியான இன்று நடைபெறும். கோரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்குத் தொடங்கும். இந்த இறுதிப் போட்டியை நீங்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் காணலாம்
Published On - Sep 22,2026 8:00 AM