AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: உயிரிழந்த 11 பேருக்கு நினைவகம்.. உணர்ச்சிப்பூர்வமான முடிவை எடுத்த ஆர்சிபி!

Royal Challengers Bengaluru: உயிரிழந்த 11 பேரின் நினைவகம், வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2026 தொடக்க போட்டிக்கு முன்னதாக, மைதானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் திறந்து வைக்கப்படும். போட்டி நாளில் உயிரிழந்த 11 பேரின் பெயர்கள் ஒரு பெரிய திரையில் காண்பிக்கப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.

IPL 2026: உயிரிழந்த 11 பேருக்கு நினைவகம்.. உணர்ச்சிப்பூர்வமான முடிவை எடுத்த ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Mar 2026 18:11 PM IST

2026 ஐபிஎல் சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி நிர்வாகமும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான முடிவை எடுத்துள்ளன. அதன்படி, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 இருக்கைகள் மற்றும் ஒரு நினைவு பலகை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: ஸ்ட்ராங்கா? வீக்கா? ஆர்சிபி அணிக்கு காத்திருக்கும் சவால் இவைதான்!

என்ன நடந்தது..?

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, அதிகளவிலான கூட்டம் நிரம்பியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் நினைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது விளையாட்டு வரலாற்றில் மிகவும் சோகமான நாட்களில் ஒன்றாக அமைந்தது. ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் கூட்டு முடிவின்படி, ஸ்டேடியத்தின் ஒரு முக்கிய கேலரியில் உள்ள 11 இருக்கைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதிலிருந்து நீக்கப்பட்டு, இனி இருக்கைக்கான டிக்கெட்டுகள் விற்கப்படாது. ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளின் போதும் இந்த இருக்கைகள் காலியாகவே இருக்கும்.

நினைவு பலகை:


உயிரிழந்த 11 பேரின் நினைவகம், வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2026 தொடக்க போட்டிக்கு முன்னதாக, மைதானத்தின் நுழைவாயிலுக்கு அருகில் திறந்து வைக்கப்படும். போட்டி நாளில் உயிரிழந்த 11 பேரின் பெயர்கள் ஒரு பெரிய திரையில் காண்பிக்கப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. இது மட்டுமின்றி, பயிற்சி அமர்வுகளின்போது 11ம் எண் ஜெர்சியை அனைத்து வீரர்களும் அணியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: வார்ம் அப் போட்டியில் அசத்திய விராட் கோலி – வெங்கேடஷ் ஐயர் டிம் டேவிட்டும் அபாரம் – வலுவான ஃபார்மில் ஆர்சிபி அணி

இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில்,”அந்த நாளை நினைவுகூர்வது மிகவும் வேதனையானது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பது முக்கியம்.” என்று தெரிவித்தார்.

Follow Us