AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள்.. விரட்டி விரட்டி அடித்த விராட் கோலி..!

Virat Kohli: ஐபிஎல் 2026 சீசன் தொடங்கும் முன்பே, இந்த சீசனில் விராட் கோலி நட்சத்திர வீரராக ஜொலித்து அதிக ரன்களை திரட்டுவார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் 267 போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 63 அரைசதம் உள்பட 8661 ரன்களை குவித்துள்ளார். அதன்படி, 2026 சீசனில் 9000 ரன்களை கடந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Mar 2026 18:07 PM IST
ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலியின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஐபிஎல் ஒரு சில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி அதிக ரன்களை குவித்துள்ளார். அதன்படி, விராட் கோலி எந்த 5 பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

1 / 6
அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக விராட் கோலி 149 பந்துகளை சந்தித்து 121.47 ஸ்டிரைக் ரேட்டில் 6 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 181 ரன்கள் எடுத்துள்ளார்.

2 / 6
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விராட் கோலி 160 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 111.87 என்ற மெதுவான ஸ்டிரைக் ரேட்டில் 179 ரன்கள் எடுத்துள்ளார்.

3 / 6
விராட் கோலி 175 ஸ்டிரைக் ரேட்டில் உமேஷ் யாதவுக்கு எதிராக 96 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் குவித்துள்ளார்.  இதன்மூலம், உமேஷ் யாதவுக்கு எதிராக சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் விராட் கோலியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.

4 / 6
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ராவுக்கு எதிராக விராட் கோலி 105 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் உதவியுடன் 162 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது, விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் 154.28 ஆக இருந்தது.

5 / 6
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளரும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளருமான டி.ஜே. பிராவோவுக்கு எதிராக, விராட் கோலி 103 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளின் உதவியுடன் 152.42 ஸ்டிரைக் ரேட்டில் 157 ரன்கள் எடுத்துள்ளார்.

6 / 6
Follow Us