AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பஞ்சாப் அணியும் தோல்வி.. பந்தயத்தில் தடுமாற்றம்.. பிளே ஆஃப் செல்ல மற்ற அணிகள் சமன்பாடு இதோ!

IPL 2026 Playoffs: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் முதல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) வரை, ஒவ்வொரு அணியின் தலைவிதியும் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. யார் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் யார் வெளியேற நேரிடும் என்ற சஸ்பென்ஸ் இப்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது.

IPL 2026: பஞ்சாப் அணியும் தோல்வி.. பந்தயத்தில் தடுமாற்றம்.. பிளே ஆஃப் செல்ல மற்ற அணிகள் சமன்பாடு இதோ!
ஐபிஎல் 2026 பிளே ஆஃப்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 May 2026 15:17 PM IST

இந்தியா முழுவதும் ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக ஐபிஎல் 2026 சீசன் விருந்து படைத்து வருகிறது. இருப்பினும், பாதி சீசன் முடிந்த வரையில் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் முதல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) வரை, ஒவ்வொரு அணியின் தலைவிதியும் இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. யார் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் யார் வெளியேற நேரிடும் என்ற சஸ்பென்ஸ் இப்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. 46 போட்டிகளுக்குப் பிறகு பிளேஆஃப்களில் ஒவ்வொரு அணியின் நிலையையும் தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2027ல் கேப்டனை மாற்றப்போகும் 3 அணிகள்..? காரணம் இதுதான்..!

ஐபிஎல் 2026-ல் அனைத்து அணிகளின் பிளேஆஃப் இடங்கள்:

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 16 புள்ளிகளை எட்டுவதற்கு, பஞ்சாப் மீதமுள்ள 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் போதுமானது. பல அணிகளால் 16 புள்ளிகளை எட்டினாலே பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும். இந்நிலையில், பஞ்சாப் அணியும் தனது இடத்தை உறுதி செய்ய, 3 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளைக் கடந்து 19 புள்ளிகளை எட்ட வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற, பெங்களூரு மீதமுள்ள 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், பல அணிகள் 16 புள்ளிகளை எட்டினால், நிகர ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், பெங்களூரு பிளே ஆஃப் சுற்றை கெட்டியாக பிடித்துக்கொள்ள 18 புள்ளிகளை எட்டினால், வலுவான இடத்தை பிடிக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

16 புள்ளிகளை எட்டுவதற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தது இரண்டிலாவது வெற்றி பெற வேண்டும். 18 புள்ளிகளை எட்டுவதற்கு ஹைதராபாத் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஹைதராபாத் அணி தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 10 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன்படி, 16 புள்ளிகளை எட்டுவதற்கு 4 போட்டிகளில் இரண்டிலும், 18 புள்ளிகளை எட்டுவதற்கு 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் அணி பத்து போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளையும் பெற்றுள்ளது. 16 புள்ளிகளை எட்டுவதற்கு, குஜராத் அணி மீதமுள்ள 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும். 18 புள்ளிகளை எட்டுவதற்கு 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 18 புள்ளிகளை எட்டுவதற்கு சென்னை மீதமுள்ள 5 போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் 16 புள்ளிகளை எட்டுவதற்கு 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற வேண்டும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டெல்லி கேப்பிட்டல்ஸின் நிலைமையும் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே உள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 18 புள்ளிகளை எட்டுவதற்கு டெல்லி அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். 16 புள்ளிகளை எட்டுவதற்கு டெல்லி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் இருந்து 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 17 புள்ளிகளை எட்டுவதற்கு, கொல்கத்தா மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

ALSO READ: தொடர்ந்து சொதப்பும் சூர்யா, திலக்.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்!

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸால் 16 புள்ளிகளை எட்ட முடியாது. ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். அதன்படி, 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, மும்பை பிளே ஆஃப் செல்வது என்பது தகுதி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. மும்பை தங்களது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், அவர்களால் 14 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், லக்னோ தனது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளை எட்ட முடியும்.

Follow Us