IPL 2026: அடுத்தடுத்து விதி மீறல்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!
BCCI Warning: ரியான் பராக் மீதான நடவடிக்கையை அறிவித்த தனது மின்னஞ்சலில், ஐபிஎல்-இன் நற்பெயரைக் காக்கும் பொருட்டு, விதிகளை மீறும் அணி, அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ மற்ற வழிகளையும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) டக் அவுட்டில் மொபைல் போன் பயன்பாடு, இ-சிகரெட் பயன்படுத்துதல் போன்ற சர்ச்சைகுரிய விஷயங்கள் அரங்கேறியது. இந்த இரண்டு விஷயங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே சம்பந்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில், ஐபிஎல்-இன் நற்பெயரைப் பேணுவதற்கு வீரர்களும் அதிகாரிகளும் பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் அணிகளைக் கட்டுப்படுத்த நிர்வாக அமைப்பு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவாஜித் சைகியா நேற்று அதாவது 2026 மே 2ம் தேதி தெரிவித்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் போது நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மற்றும் அணி மேலாளர் ரோமி பிந்தர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஹர்திக் கேப்டன் மட்டுமே! பயிற்சியாளர் அல்ல.. விளாசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
பிசிசிஐ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவாஜித் சைகியா, ”விதிமுறைகளை மீறும் அணிகளைக் கட்டுப்படுத்த, நாங்கள் வேறு சில வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளோம். நாங்கள் சில நடவடிக்கைகளை எடுப்போம். மேலும், அணிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த பல்வேறு ஐபிஎல் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் நெறிமுறைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இது அவர்களின் வீரர்கள் அல்லது அதிகாரிகளுக்கு மட்டும் பொருந்தாது. ஒரு அணியாக, ஐபிஎல்-இன் நற்பெயர் ஒருபோதும் களங்கமடையாத வகையில் அணிகள் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தைப் பேண வேண்டும். அதை உறுதிசெய்ய, நாம் ஒரு முடிவை எடுத்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.




ரியான் பராக் மீதான நடவடிக்கையை அறிவித்த தனது மின்னஞ்சலில், ஐபிஎல்-இன் நற்பெயரைக் காக்கும் பொருட்டு, விதிகளை மீறும் அணி, அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ மற்ற வழிகளையும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இ-சிகரெட் குறித்து பேசிய சைகியா:
கடந்த 2019ம் ஆண்டின் மின்னணு சிகரெட்டுகள் (மின்னணு சிகரெட்டுகள் தடை) சட்டத்தின் கீழ், நாட்டில் வேப்பிங் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதால், பஞ்சாப் காவல்துறை பிசிசிஐ-யைத் தொடர்பு கொண்டதா என்று கேட்டதற்கு பதிலளித்த தேவாஜித் சைகியா, ”இல்லை, அப்படி எந்தச் சூழ்நிலையும் இல்லை” என்று பதிலளித்தார்.
ALSO READ: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை.. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கும் என்றும் சைகியா கூறினார். அதில், ”இரண்டு நாட்களில் நாங்கள் போட்டி நடைபெறும் இடங்களை அறிவிப்போம். ஐபிஎல் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு எந்த இடங்கள் சிறந்தவை என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எனவே, இதற்கு எங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்” என்று கூறினார்.