AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அரைசதம் அடித்து மும்பையை முடித்த ருதுராஜ்.. 4வது வெற்றியை பதிவு செய்த சென்னை!

CSK vs MI Highlights: 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா அரைசதத்தின் உதவியால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஐபிஎல் 2026 சீசனில் 4வது வெற்றியை பெற்றது. 

IPL 2026: அரைசதம் அடித்து மும்பையை முடித்த ருதுராஜ்.. 4வது வெற்றியை பதிவு செய்த சென்னை!
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 02 May 2026 23:26 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 2ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக நமன் தீர் 37 பந்துகளில் 57 ரன்களும், ரியான் ரிகல்டன் 37 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தவிர, வேறு எந்த மும்பை பேட்ஸ்மேனாலும் குறிப்பிடத்தக்க ரன்களை எடுக்க முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அன்ஷுல் தனது 4 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதேசமயம் ஓவர்டன் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார், ஆனால் அவர் தனது 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ALSO READ: சூர்யவன்ஷியை பார்த்து அவ்வளவு பயம்.. ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு கைல் ஜேமிசன் விளக்கம்!

160 ரன்கள் இலக்கு:


160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா அரைசதத்தின் உதவியால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து உள்ளே வந்த உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியுடன் 24 ரன்கள் எடுத்தார். இதன் தொடர்ச்சியாக ருதுராஜ் கெய்க்வாட் (67) மற்றும் கார்த்திக் சர்மா (54) ஆகியோரின் 98 ரன் பார்ட்னர்ஷிப், சென்னை அணியின்  வெற்றியை உறுதி செய்தது. ஒன்பது போட்டிகளில் இது மும்பை அணிக்கு ஏற்பட்ட ஏழாவது தோல்வியாகும்.

ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2026 தொடரில் தனது இரண்டாவது தொடர்ச்சியான அரைசதத்தை 48 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அடித்தார். இதற்கிடையில், கார்த்திக் ஷர்மா தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் அரைசதத்தை 54 ரன்கள் எடுத்துப் பதிவு செய்தார்.

ALSO READ: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!

மும்பை வெளியேறிவிட்டதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிவிட்டதா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாக உள்ளது. இப்போது, ​​மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற விரும்பினால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே கிட்டதட்ட சாத்தியம்.

Follow Us