AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஹர்திக் கேப்டன் மட்டுமே! பயிற்சியாளர் அல்ல.. விளாசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Hardik Pandya Captaincy: ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 7ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 பிளே ஆஃப்பிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியால் தாங்களாகவே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது.

IPL 2026: ஹர்திக் கேப்டன் மட்டுமே! பயிற்சியாளர் அல்ல.. விளாசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!
ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 May 2026 16:11 PM IST

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு, ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இதுவரை மோசமாகவே செயல்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2026 ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 7ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 பிளே ஆஃப்பிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியால் தாங்களாகவே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. ஏதாவது, அதிசயம் நடந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். சென்னை அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, கேப்டனாக பாண்டியா செய்த சில தவறுகளை வெளிப்படுத்தினார்.

ALSO READ: தொடர்ந்து சொதப்பும் சூர்யா, திலக்.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்!

மனோஜ் திவாரி கூறியது என்ன..?

மும்பை இந்தியன்ஸ் குறித்து கிரிக்பஸ்ஸில் பேசிய மனோஜ் திவாரி, ”ஒரு கேப்டனாக, வீரர்களின் நம்பிக்கையைப் பெறுவது உங்கள் வேலை. ஆனால் தற்போதைய நிலைமை, ஹர்திக் பாண்ட்யா வீரர்களுக்கு முழு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டுகிறது. அதேபோல், அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வழக்கம் போல, அந்த கேட்ச் தவறவிடப்பட்டது. பின்னர் பும்ரா அவரை ஆட்டமிழக்கச் செய்தார். பும்ராவுக்கு ஏன் இரண்டாவது ஓவர் வழங்கப்பட்டது? அவருக்கு ஏன் முதல் ஓவர் வழங்கப்படவில்லை? இதைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். பும்ரா உங்கள் பிரதான பந்துவீச்சாளர் என்றால், அவருக்கு முதல் ஓவரைக் கொடுங்கள். முதல் ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்திருந்தால், புதிய பேட்ஸ்மேன் மீதான அழுத்தத்தை கற்பனை செய்து பாருங்கள்.” என்றார்.

ALSO READ: 8 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே.. பிளே ஆஃப் செல்ல மும்பைக்கு வாய்ப்பு உள்ளதா?

மனோஜ் மேலும் கூறுகையில், “ட்ரென்ட் போல்ட் மூன்றாவது ஓவரில் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா முதல் ஓவரை வீசியிருந்தால், அவரே மூன்றாவது ஓவரையும் வீசியிருப்பார். எனவே, இந்த மாற்றத்தை, இந்த சோதனையை யார் செய்வார்கள்? அதைச் செய்பவர் கேப்டனாகத்தான் இருப்பார், தலைமைப் பயிற்சியாளராக அல்ல. ஐந்தாவது ஓவரை, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களில் ஒருவரான கிரிஷ் பகத்திடம் கொடுத்தீர்கள். ஆக, அதிக அனுபவம் வாய்ந்த உங்கள் முக்கிய பந்துவீச்சாளர்களைப் பந்துவீசப் பயன்படுத்தவில்லை. இது, இந்த சீசனில் உங்கள் பந்துவீச்சு எந்தப் பக்கம் செல்கிறது என்பதைக் காட்டுகிறது,” என்றார்.

Follow Us