AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டி20 உலகக்கோப்பை 2026: 33 பந்துகளில் சதம் – ஃபின் ஆலன் உலக சாதனை – இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்

Finn Allen Creates history : டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக ஆடி, உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். இதனால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னெறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை 2026: 33 பந்துகளில் சதம் – ஃபின் ஆலன் உலக சாதனை – இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்
ஃபின் ஆலன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Mar 2026 08:27 AM IST

நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக ஆடி, உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டிம் சைஃபர்ட் இணைந்து அதிரடியான துவக்கம் தந்தனர்.

ஃபின் ஆலன் உலக சாதனை

போட்டி தொடங்கியதில் இருந்தே நியூசிலாந்து பவுலர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ஆலன், வெறும் 33 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2016 T20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆலன் முறியடித்துள்ளார்.

இதையும் படிக்க : IPL 2026: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!

ஃபின் ஆலனின் சதம் குறித்து ஐசிசி பதிவு

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

இதில் ஆலன் அடித்த 10 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும். தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை தொடக்கம் முதலே அடித்து ஆடிய அவர், பந்துகளை சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவருடன் இணைந்து விளையாடிய டிம் சைஃபர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிக்க : IND vs ENG Semi Final: அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!

இறுதியில் நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மற்றொரு அரையிறுதி போட்டி மார்ச் 5, 2026 அன்று மும்பையில் நடைபெறவிருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் ஃபின் ஆலன் இந்தியாவிற்கு சவாலாக இருப்பார்.

இதனையடுத்து இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் நம்பிக்கை அளித்து வருகிறார்.

Follow Us