AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் முக்கியம்.. அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர்..!

Vaibhav Suryavanshi: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் சாம்பியன்கள் உள்பட பல அணிகளுக்கு எதிராக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். பும்ரா, புவனேஷ்வர் குமார், போல்ட் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தார்.

IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியின் எதிர்காலம் முக்கியம்.. அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர்..!
வைபவ் சூர்யவன்ஷி - சுனில் கவாஸ்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Apr 2026 18:17 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) வெறும் 15 வயதிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் சாம்பியன்கள் உள்பட பல அணிகளுக்கு எதிராக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். பும்ரா, புவனேஷ்வர் குமார், போல்ட் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அவரது ஆட்டத்தைப் பார்த்த பிறகு, பல ஜாம்பவான்கள் வைபவ் சூர்யவன்ஷியை (Vaibhav Suryavanshi) புகழ்ந்து தள்ளுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்த பிறகு, அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த விதம், கிரிக்கெட் உலகில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: பும்ரா, ஹேசில்வுட் சறுக்கல்.. உலகின் டாப் பவுலர்களை தடுமாற செய்யும் வைபவ் சூர்யவன்ஷி..

சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை:

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறனால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து,  வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஊடகங்களுக்கு கவாஸ்கர் அறிவுரையும் வழங்கினார்.  அதில்,” இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அளவுக்கு அதிகமாகப் புகழ வேண்டாம். எந்தவொரு வீரரிடமிருந்தும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் தீங்கு விளைவிப்பதோடு, ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தையே பாழாக்கிவிடும். காலப்போக்கில், எதிரணிகளும் பயிற்சியாளர்களும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்ட பாணியை ஆராய்வார்கள். அனைவரும் அவரது பலவீனங்களைக் கண்டறிய முயற்சிப்பார்கள். வைபவிற்கு எது அழுத்தத்தை அளிக்க தொடங்கும், அவரை எங்கே சிக்க வைக்கலாம் என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். அதன்படி, எதிரணி அவரது நுட்பத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, பின்னர் அவரது மனப்பான்மையில் உள்ள பலவீனங்களைத் தேட தொடங்குவார்கள்” என்றார்.

ALSO READ: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர், “பேட்டிங் செய்யும்போது அவரது நிதானத்தைக் குலைக்கக்கூடிய ஏதாவது இருக்கிறதா என்பதை அவரது எதிரணியினரும் பார்க்க விரும்புவார்கள். இந்த இளம் வீரர் இப்போது அனைவரின் பார்வையிலும் இருப்பார். பந்துவீச்சாளர்களும் பயிற்சிக் குழுவும் வைபவ் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து ஆராய்வார்கள். அனைவரும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். அவரது பலவீனங்கள் வெளிப்பட்டு, அவற்றை மேம்படுத்த அவர் உழைக்கும்போதுதான் அவருக்கு உண்மையான சோதனை அமையும். அந்த பலவீனங்களை மறைத்து, அவற்றை பலமாக மாற்றுவதே முக்கியமாக இருக்கும்.” என்றார்.

Follow Us