AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தடுமாறும் சிஎஸ்கே! இதுதான் கேப்டன்ஷியா..? ருதுராஜை சாடிய பத்ரிநாத், பாலாஜி!

CSK Down Fall: சிஎஸ்கே கடந்த 2025ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு சீசனில் தோல்வியடைந்தது. அந்த அணியின் வரலாற்றில் அவர்கள் கடைசி இடத்தைப் பிடித்தது அதுவே முதல் முறையாகும். 2023-ல் பட்டத்தை வென்ற பிறகு, கடந்த இரண்டு சீசன்களாக அவர்கள் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறவில்லை. தற்போதைய ஐபிஎல் 2026 சீசனிலும் கடைசி இடத்தில் உள்ளது.

IPL 2026: தடுமாறும் சிஎஸ்கே! இதுதான் கேப்டன்ஷியா..? ருதுராஜை சாடிய பத்ரிநாத், பாலாஜி!
ருதுராஜ் கெய்க்வாட் - பத்ரிநாத் மற்றும் பாலாஜி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Apr 2026 16:33 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) நிர்வாகத்தில் யாரும் முறையான வீரர் தேர்வு பணியில் ஈடுபடுவதில்லை என்று முன்னாள் சிஎஸ்கே வீரர்களான பத்ரிநாத் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் சாடியுள்ளனர்.

ALSO READ: இனி இந்த வீரர்கள் மைதானத்திற்குள் போக முடியாது – ஐபிஎலுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு – இதுதான் காரணமா?

பத்ரிநாத் சாடல்:

சிஎஸ்கே கடந்த 2025ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு சீசனில் தோல்வியடைந்தது. அந்த அணியின் வரலாற்றில் அவர்கள் கடைசி இடத்தைப் பிடித்தது அதுவே முதல் முறையாகும். 2023-ல் பட்டத்தை வென்ற பிறகு, கடந்த இரண்டு சீசன்களாக அவர்கள் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறவில்லை. தற்போதைய ஐபிஎல் 2026 சீசனிலும் கடைசி இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய பத்ரிநாத், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை அதாவது 2026 ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி அணியின் பயிற்சியாளர்களான ஹேமங் பதானியும், வேணுகோபால் ராவும் உலகம் முழுவதிலுமிருந்தும், இந்தியாவில் நடந்த லீக் போட்டிகளிலிருந்தும் அனைத்து ஆட்டங்களையும் நேரடியாகப் பார்த்தார்கள். சிஎஸ்கே-வுக்காகவும் இதேபோலச் செய்தது யார்? பெயர் குறிப்பிடாத ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்கள் 14 கோடிக்கு இரண்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது

சிஎஸ்கே சமீர் ரிஸ்வியை ஒரு பெரிய தொகைக்கு வாங்கி, அவரை ஆறாவது இடத்தில் விளையாட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால், அடுத்த ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் ரிஸ்வியை எடுத்து பயன்படுத்தி கொண்டது.” என்றார்.

ALSO READ: முதல் வெற்றிக்காக போராட்டம்.. புள்ளிக்காக காத்திருக்கும் 3 முன்னாள் சாம்பியன்கள்..!

லட்சுமிபதி பாலாஜி சொன்னது என்ன..?

சிஎஸ்கேவின் தொடர் தோல்வி, ஆர்சிபி எதிராக பந்துவீச்சு குறித்து பேசிய சிஎஸ்கே முன்னாள் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, “சிறந்த கேப்டன்கள் ஆட்டம் சாதகமாக இருக்கும்போது, ​​இரண்டாம் நிலை பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவார்கள். அதேநேரத்தில், டெத் ஓவர்களில் அவர்களுக்கு பெரியளவில் ஓவர்களை கொடுக்க மாட்டார்கள். அப்போதுதான் ஒரு அணியால் கடைசி ஓவர்களில் 20 ரன்களை சேமிக்க முடியும். போட்டியின் நடுவில் ஜெமி ஓவர்டன் சிறப்பாக பந்துவீசி 2 ஓவர்களில் 13 ரன்களை விட்டுகொடுத்தார். அவரை மீண்டும் அழைத்து வந்து டெத் ஓவர்களில் 40 ரன்கள் கொடுக்க வைப்பதில் என்ன பயன்..?

பந்துவீச்சு முதல் கேப்டன்சி வரை சிஎஸ்கே தற்போது அனைத்து துறைகளிலும் சிக்கல்கள் இருப்பது போல் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

Follow Us