AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக எம்.எஸ். தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருப்பு!

CSK MS Dhoni: எம்.எஸ்.தோனியின் பங்கேற்பு குறித்து சென்னை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியில், எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் பங்கேற்காமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது. தோனி தனது கால் தசை காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார்.

IPL 2026: இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக எம்.எஸ். தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருப்பு!
எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Apr 2026 14:44 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி 2 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 3.30 மணிக்கு மோதுகிறது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறட்து. போட்டிக்கு முன்னதாக, முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தோனியை களத்தில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

நேற்று அதாவது 2026 ஏப்ரல் 17ம் தேதி எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை சென்னை அணி பகிர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ரசிகர்களிடையே ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாடாமல் இருக்கலாம் என்று கடந்த 2026 மார்ச் 28ம் தேதி சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டது.

ALSO READ: முன்னேறும் குஜராத் அணி.. சிஎஸ்கே, ஆர்சிபி நிலை என்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!

தோனி இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுவாரா?


எம்.எஸ்.தோனியின் பங்கேற்பு குறித்து சென்னை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியில், எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் பங்கேற்காமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது. தோனி தனது கால் தசை காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். ஆனால் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் தோனி அடுத்ததாக சென்னை அணிக்காக விளையாடக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி எப்போது திரும்புவார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியின் போது தோனிக்கு ஏற்பட்ட காயம், அவரை போட்டிகளிலிருந்து விலக்கியது. இதுதொடர்பாக சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில், ”எம்.எஸ்.தோனி இன்னும் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவரது, உடற்தகுதி விஷயத்தில் நாங்கள் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தது.

ALSO READ: ஹைதராபாத்தில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி? – வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

இந்த சீசனில் சென்னையின் செயல்பாடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது. இன்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி எப்படியாவது வெற்றி பெறுவது முக்கியம்.

Follow Us