IPL 2026: வைபவ் செய்த சம்பவம்.. 220 ரன்கள் எடுத்தும் லக்னோ தோல்வி..!
RR vs LSG Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி 19.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களின் உதவியுடன் 93 ரன்கள் குவித்து, அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி தனது பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
ALSO READ: தோனிக்குப் பிறகு கேப்டன் பதவி எளிதானது அல்ல.. ருதுராஜ் குறித்து பேசிய ஃபிளேமிங்!




பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட ராஜஸ்தான்:
Itni khushiii 💗 pic.twitter.com/giVCZhFf8J
— Rajasthan Royals (@rajasthanroyals) May 19, 2026
வெற்றியின் மூலம், ராஜஸ்தான் 13 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், 16 புள்ளிகளை எட்ட முடியும். தற்போது, ஒரேயொரு பிளேஆஃப் இடத்திற்காக 5 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த அணிகளில், 16 புள்ளிகளைப் பெற்று நேரடியாக பிளேஆஃப்களுக்குத் தகுதிபெறக்கூடிய வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே பெற்றுள்ளது.
மிட்செல் மார்ஷின் ஆட்டம் வீண்:
இந்தப் போட்டியில், ராஜஸ்தான் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களின் உதவியுடன் 96 ரன்கள் குவித்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.
பெரிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வைபவ், துருவ் ஜூரலுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து, அணிக்கு ஏறக்குறைய முழுமையான வெற்றியை உறுதி செய்தார்.
ALSO READ: சென்னையில் முதல்முறை பிக் பாஷ் லீக்.. ஒப்புதல் அளித்த பிசிசிஐ.. எப்போது நடைபெறுகிறது?
பின்னர், ஜூரலும் லெஹுவான்-ட்ரே பிரிட்டோரியஸும் மூன்றாவது விக்கெட்டுக்கு 14 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தனர். இறுதியாக, ஜூரலும் டெனோவன் ஃபெரைராவும் 17 பந்துகளில் 29* ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி தவிர, கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43, துருவ் ஜூரல் 53, டெவோன்வ் பெரேரா 16, லுஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் 07 ரன்கள் எடுத்தனர்.