AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தோனிக்குப் பிறகு கேப்டன் பதவி எளிதானது அல்ல.. ருதுராஜ் குறித்து பேசிய ஃபிளேமிங்!

CSK captain Ruturaj Gaikwad: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. வருகின்ற 2026 மே 21ம் தேதி நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், வெற்றி மட்டுமே போதுமானதாக இருக்காது,.ஏனெனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டும். 

IPL 2026: தோனிக்குப் பிறகு கேப்டன் பதவி எளிதானது அல்ல.. ருதுராஜ் குறித்து பேசிய ஃபிளேமிங்!
ருதுராஜ் கெய்க்வாட்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 May 2026 16:26 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 18ம் தேதி நடைபெற்ற 63வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகளுக்கிடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி 180 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், ஹைதராபாத் அணி ஒரு ஓவர் மீதமிருக்க இந்த சிறிய இலக்கை எட்டியது. இந்தத் தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் மிகுந்த ஏமாற்றமடைந்தார். போட்டிக்குப் பிறகு, அணியின் செயல்பாடு குறித்த தனது கருத்துக்களை ஃபிளெமிங் தெரிவித்தார். அதில், கேப்டன் கெய்க்வாட் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: சிஎஸ்கே நிலைமை என்ன? ஏதும் வாய்ப்புள்ளதா? ஐபிஎல் புள்ளி பட்டியல் சொல்வதென்ன?

ருதுராஜ் மீது ஃபிளெமிங் நம்பிக்கை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. வருகின்ற 2026 மே 21ம் தேதி நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், வெற்றி மட்டுமே போதுமானதாக இருக்காது,.ஏனெனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டும்.

சிஎஸ்கே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய ஃபிளெமிங், ”ருதுராஜ் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தில் இருக்கிறார். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியிடமிருந்து ருதுராக் பொறுப்பேற்கிறார். எனவே, இதற்குச் சிறிது காலம் ஆகும். ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பில் நன்கு பொருந்தி வருகிறார். மேலும், வீரர்களிடையே மிகுந்த மரியாதையையும் பெற்றுள்ளார். ருதுராஜ் தொடர்ந்து கற்றுக்கொண்டு, தனது திறமைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். எனவே, எதிர்காலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

மீண்டு வந்த சிஎஸ்கே..

ஃபிளெமிங் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் சிஎஸ்கே அணியில் பல மாற்றங்களைச் செய்தோம். மேலும், ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் மற்ற அணிகளை விட சற்று பின்தங்கியிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நன்றாகத் தொடங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் மோசமாகத் தொடங்கினோம். பின்னர் நாங்கள் சிறப்பாக மீண்டு வந்தோம், அது மிகவும் திருப்தி அளிக்கிறது. மேலும், கால் தசைக் காயம் காரணமாகக் களமிறங்க முடியாத நிலையிலும், டக்அவுட்டில் மகேந்திர சிங் தோனியின் இருப்பு அணிக்குத் தொடர்ச்சியான உந்துதலாக இருந்து வருகிறது” என்றார்.

ALSO READ: ஹைதராபாத் எதிரான தோல்வி.. சென்னை பிளே ஆஃப் செல்லுமா..? இதுதான் சமன்பாடு!

ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில் ருதுராஜ் இதுவரை 13 போட்டிகளில் 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார். மேலும் அவரது சராசரி 29 ஆகும். இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

Follow Us