AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா.. லக்னோவுக்கு எதிராக இம்பாக்ட் வீரராக களமா?

Rohit Sharma MI: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவதா வேண்டாமா என்பதை ரோஹித் சர்மா அவரே முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், ரோஹித்தின் பங்கேற்பு அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த முடிவை முழுவதுமாக ரோஹித்தின் விருப்பத்திற்கே மும்பை நிர்வாகம் விட்டுள்ளது.

IPL 2026: தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா.. லக்னோவுக்கு எதிராக இம்பாக்ட் வீரராக களமா?
ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 May 2026 18:00 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை இந்தியன்ஸ் அணியின் கடந்த 5 போட்டிகளாக ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது. கடந்த 2026 ஏப்ரல் 12ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இன்று அதாவது 2026 மே 4ம் தேதி ஐபிஎல் 2026-ன் 47வது போட்டி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்தநிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவதா வேண்டாமா என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார் என கிரிக்பஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

ALSO READ: ஐபிஎல்லில் அதிகரிக்கும் காதலியை அழைத்துவரும் கலாச்சாரம்.. பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!

ரோஹித் சர்மாவின் வருவது குறித்த சஸ்பென்ஸ்:


கிரிக்பஸ் தகவலின்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவதா வேண்டாமா என்பதை ரோஹித் சர்மா அவரே முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், ரோஹித்தின் பங்கேற்பு அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த முடிவை முழுவதுமாக ரோஹித்தின் விருப்பத்திற்கே மும்பை நிர்வாகம் விட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா நெட் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார். அதன்படி, ரோஹித் சர்மா தனது உடற்தகுதியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனேவும் ரோஹித்துடன் காணப்பட்டார். இன்றைய போட்டியில் ரோஹித் விளையாடுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ரோஹித் சர்மா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2027ல் கேப்டனை மாற்றப்போகும் 3 அணிகள்..? காரணம் இதுதான்..!

இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானது. ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று மும்பை அணி, புள்ளி அட்டவணையில் 9வது இடத்தில் உள்ளது. அதே சமயம், 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளி அட்டவணையின் கடைசி இடத்தில் உள்ளது. பிளேஆஃப் போட்டியில் நீடிக்க இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவையாக உள்ளது. அதன்படி, எந்த அணி வெற்றிபெறும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us