AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் இனி இதை செய்ய தடை.. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!

IPL 2026 New Rules: தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரீல்ஸ் உருவாக்குவது, பாதுகாப்பு அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படும் விஷயங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடன் வீரர்கள் நெருக்கமாகப் பழகுவது போன்ற காரணங்களால், ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளின் வீரர்களுக்கும் பிசிசிஐ கடுமையான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

IPL 2026: ஐபிஎல்லில் இனி இதை செய்ய தடை.. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!
ஐபிஎல் 2026
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 May 2026 15:56 PM IST

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) அதிகப்படியான சர்ச்சைகளில் வீரர்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. போட்டி மைதானத்தில் காதலியை அழைத்து வருவது, ட்ரெஸ்ஸிங் ரூமில் புகைப்பிடித்தல், விமானத்தில் ரீல்ஸ் எடுத்தல் என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், பிசிசிஐ (BCCI) சில கடுமையான விஷயங்களுக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2026-ல் என்னென்ன தடை செய்யப்பட்டுள்ளன, இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ: ராஜஸ்தான் கேப்டனாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்.. ரியான் பராக்கிற்கு என்ன ஆனது..?

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரீல்ஸ் உருவாக்குவது, பாதுகாப்பு அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படும் விஷயங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடன் வீரர்கள் நெருக்கமாகப் பழகுவது போன்ற காரணங்களால், பிசிசிஐ கடுமையான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. மேலும், வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் அணி அதிகாரிகளின் ஹோட்டல் அறைகளில் அங்கீகரிக்கப்படாத விருந்தினர்கள் தங்குவதற்கு எதிராக வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட கட்டுபாடுகள்:

  • விருந்தினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், வீரர்கள் தங்களின் செயல்பாடுகள் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  • பங்கேற்கும் அணிகளுக்காகச் சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்கக் குறுகிய காலத்திற்குப் பணியமர்த்தப்படும் இன்ஃப்ளூயன்சர்களுடன் வீரர்கள் நெருக்கமாகப் பழகுவது, இந்தக் கொள்கையின் ஒரு முக்கிய மீறலாகும்.

அணி நிர்வாகம் விளக்கம்:

ஒரு ஃபிரான்சைஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், ”புதிய விதிகள் தொடர்பாக பிசிசிஐ-யிடமிருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன, மேலும் அவை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய வீரர்கள் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு நவீனப் போக்காகும். ஆனால், அது பிசிசிஐ நிர்ணயித்த வரம்புகளுக்குள் செய்யப்பட வேண்டும். தனிநபர்களின் ஒவ்வொரு செயலையும் கண்காணிப்பது சாத்தியமில்லை. இது ஒரு சிக்கலாகும். பிசிசி விதிகள் மற்றும் அவற்றை மீறுவதன் விளைவுகள் குறித்து வீரர்களுக்கும் உள்ளடக்கக் குழுக்களுக்கும் நாங்கள் தெரிவித்து வருகிறோம்” என்று கூறினார்.

ALSO READ: ஜார்க்கண்ட்-பீகாரில் அதிக வரி செலுத்திய நபர்.. முதலிடத்தில் தோனி!

மேலும், ”நாங்கள் உள்ளடக்கக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறோம்.குறிப்பாக ஐபிஎல் சீசனின் போது 2 முதல் 3 மாதங்களுக்கு நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறோம். அனுபவ வீரர்கள் விதிகள் மற்றும் அவற்றை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து அறிந்திருக்கிறார்கள். ஐபிஎல்-லில் முதல் முறையாக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் நட்சத்திரங்களைப் பின்தொடர்வதன் மூலம் சமூக ஊடகங்களில் லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் பெற விரும்புகிறார்கள். எனவே, அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.

Follow Us