தவெக பொதுச்செயலர் ஆனந்த்- விஜயபாஸ்கர் சந்திப்பு.. ஜூன் 29-இல் கட்சியில் இணைய திட்டம்?
Vijayabaskar Meet N Anand : தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்துடன் அதிமுகவிலிருந்து விலகிய விஜயபாஸ்கர் திடீரென சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது, கட்சியில் இணைவது தொடரபாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
என்.ஆனந்த் - விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை அண்மையில் அதிமுகவிலிருந்து விலகிய விஜயபாஸ்கர் இன்று புதன்கிழமை திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இவர், வருகிற ஜூன் 29- ஆம் தேதி திங்கள்கிழமை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)
Follow Us