AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் புகை.. ஹோட்டல்களில் விருந்தினருடன் நடை.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

BCCI Issues Honey Trap Alert: ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களின் விருந்தினர்களை ஹோட்டல் லாபி அல்லது பொது இடங்களில் மட்டுமே சந்திக்க வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது பாதுகாப்புக் குறைபாடுகளைத் தடுப்பதற்காக, ஹோட்டல் அறைகள் கண்டிப்பாக "தனிப்பட்ட பகுதிகளாக" அறிவிக்கப்பட்டுள்ளன.

IPL 2026: ஐபிஎல்லில் புகை.. ஹோட்டல்களில் விருந்தினருடன் நடை.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
பிசிசிஐ
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 May 2026 16:33 PM IST

2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் (IPL 2026) பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், பிசிசிஐ இதுவரை இல்லாத மிகக் கடுமையான ஒழுங்கு விதிகளை அமல்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் நெறிமுறைகளை மீறியதாக வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, பிசிசிஐ (BCCI) ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வரும் 10 அணிகளுக்கும் 8 பக்கங்கள் கொண்ட விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் பிரீமியர் லீக்கின் நற்பெயரில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி எந்தவிதமான மெத்தனப் போக்கும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா தெளிவுபடுத்தியுள்ளார்.

ALSO READ: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியின் இடம் ஏன் மாற்றப்பட்டது? காரணம் இதுதான்!

இந்தப் புதிய வழிகாட்டுநெறி, முக்கியமாக “ஹனி ட்ராப்” மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீது கவனம் செலுத்துகிறது. சில வீரர்கள், அணி மேலாளருக்குத் தெரிவிக்காமல் வெளியாட்களைத் தங்கள் தங்கும் விடுதி அறைகளுக்குள் அழைத்ததாக பிசிசிஐ வாரியத்தின் விசாரணை குழு ஒன்றி தெரிவித்ததன் காரணமாக தற்போது, ​​ஐபிஎல்லில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீரரின் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரி, மேலாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு வெளியாளும் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.

விருந்தினருக்கு அனுமதி மறுப்பா..?

ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களின் விருந்தினர்களை ஹோட்டல் லாபி அல்லது பொது இடங்களில் மட்டுமே சந்திக்க வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது பாதுகாப்புக் குறைபாடுகளைத் தடுப்பதற்காக, ஹோட்டல் அறைகள் கண்டிப்பாக “தனிப்பட்ட பகுதிகளாக” அறிவிக்கப்பட்டுள்ளன.

ட்ரெஸ்ஸிங் ரூமில் புகைப்பிடித்த தடை:

சமீபத்தில், ரியான் பராக் ட்ரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தியபோது பிடிபட்டார். இதைத் தொடர்ந்து, பிசிசிஐ விதித்த கட்டுப்பாடுகள்..

  • போட்டி நடைபெறும் இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உடை மாற்றும் அறைகளில் இ-சிகரெட்டுகள் மற்றும் வேறு எந்தவிதமான போதைப்பொருட்களும் கண்டிப்பாகத் தடை செய்யப்படும்
  • இந்தியச் சட்டத்தின் கீழ் இ-சிகரெட் பயன்பாடு ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அமையக்கூடும். எனவே, மீறல்கள் ஏற்பட்டால் பிசிசி மட்டுமல்லாமல் சட்ட அமலாக்க அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கக்கூடும்.
  • தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் வீரர்கள் அல்லது ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
  • விளையாட்டின் கண்ணியத்தையும், அது இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கடுமையான விதிமுறைகள் வீரர்களுக்கு மட்டும் உரியதல்ல. வீரர்கள் மற்றும் பணியாளர்கள் இனி ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறும் முன் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து (SLO/TIO) முறையான அனுமதி பெற வேண்டும்.

ALSO READ: பந்துவீச்சாளராக தோனி? வலைப்பயிற்சியில் பிராக்டிஸ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!

அணி உரிமையாளர்களும் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பா?

போட்டிகளின் போது உரிமையாளர்கள் களத்தில் வீரர்களை உற்சாகமாகக் கட்டித் தழுவுவதும், அவர்களுடன் உரையாடுவதும் அடிக்கடி காணப்பட்டது. ஆனால், இதை பிசிசிஐ விதிமுறை மீறல் என்று தெரிவித்துள்ளது. இனி, போட்டிகளின் போது, ​​அணி உரிமையாளர்கள் ட்ரெஸ்ஸிங் ரூம், வீரர்கள் அமரும் இடம் அல்லது ஆடுகளப் பகுதியில் வீரர்களுடன் உடல்ரீதியாகத் தொடர்புகொள்வதற்கோ அல்லது நேரடியாக உரையாடுவதற்கோ தடை விதிக்கப்படும். பிசிசிஐ அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

Follow Us