IPL 2025: ஹைதராபாத் பேட்டிங் வேலை செய்யுமா..? கட்டுப்படுத்துமா மும்பை..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
SRH vs MI Match 41 Preview: ஐபிஎல் 2025 இன் 41வது போட்டியில், ஏப்ரல் 23 அன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை தெளிவாக இருக்கும். இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் ஹெட்-டு-ஹெட் விவரங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 41வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7. 30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் உள்ளதாக, போட்டியில் அதிக ஸ்கோரிங் எதிர்பார்க்கலாம். இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..? பிளேயிங் லெவன் என்ன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
பிட்ச் எப்படி..?
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் பிட்சை துல்லியமாக கணிப்பது என்பது கடினம். பல நேரங்களில் இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும். தட்டையான பிட்ச் என்றால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. எனவே, அதிக ஸ்கோரிங் போட்டிகள் இங்கு பெரும்பாலும் காணப்படுகிறது. இருப்பினும், கடந்த சில போட்டிகளாக இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறுகிறார்கள். இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 230 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 186 ரன்களாகவும் பதிவாகியுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது.
வானிலை எப்படி..?
2025 ஏப்ரல் 23 ஆம் தேதி ஹைதராபாத்தில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும், போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நாளில் காற்றின் வேகம் மணிக்கு 9-16 கி.மீ. ஆக இருக்கும். அதேநேரத்தில், இங்கு வெப்பநிலை 25-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி அதிகபட்சமாக 14 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 5 போட்டிகளில் மும்பை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹைதராபாத் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், அதர்வா டைடே, அனிகேத் வர்மா, அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், இஷான் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ்:
ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், நமன் தீர், ஹார்டிக் பாண்ட்யா (கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வினி குமார், டிரெண்ட் போல்ட்.