Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lionel Messi Visit: கிளம்பிய மெஸ்ஸி.. கொல்கத்தா ஸ்டேடியத்தில் கலவரம்.. மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!

Kolkata CM Mamata Banerjee: மெஸ்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், தனக்குப் பிடித்த நட்சத்திரத்தை சரியாகப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் கோபம் கொண்டு, மைதானத்தின் மீது நாற்காலிகளை வீசத் தொடங்கினர். தொடர்ந்து, மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தனர்.

Lionel Messi Visit: கிளம்பிய மெஸ்ஸி.. கொல்கத்தா ஸ்டேடியத்தில் கலவரம்.. மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!
மெஸ்ஸி - மம்தா பானர்ஜிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Dec 2025 14:52 PM IST

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். மெஸ்ஸியின் இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தாவில் தொடங்கியது. அவரது வருகை கொல்கத்தாவில் திருவிழாவை போல் ரசிகர்கள் கொண்டாடினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரரைப் பார்க்க விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் சாலைகளில் வரிசையில் நின்றனர். மெஸ்ஸி பலத்த பாதுகாப்பின் கீழ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மெஸ்ஸியுடன் அவரது சக ர்ஜென்டினா வீரர்கள் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் உடனடிருந்தனர். கொல்கத்தாவில் (Kolkata) உள்ள சால்ட் லேக் கால்பந்து ஸ்டேடியத்தில் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ALSO READ: மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.. அலறும் இணையம்!

மெஸ்ஸி விரைவாக கிளம்பியதால் சர்ச்சை:


மெஸ்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், தனக்குப் பிடித்த நட்சத்திரத்தை சரியாகப் பார்க்க முடியாததால் ரசிகர்கள் கோபம் கொண்டு, மைதானத்தின் மீது நாற்காலிகளை வீசத் தொடங்கினர். தொடர்ந்து, மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தனர். பின்னர் ரசிகர்கள் மைதானத்தின் கீழ் மட்டத்திற்கு அருகிலுள்ள தடுப்புகளை உடைத்து அரங்கத்திற்குள் நுழைந்தனர் . அவர்களின் கோபம் மைதானத்தில் பரவியது. மேலும் பார் கம்பங்களும் சேதப்படுத்தப்பட்டன.

ALSO READ: மைதானத்தில் பதற்றம்.. அவசரமாக வெளியேறிய மெஸ்ஸி.. சேர், தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்த ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ!

மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி:


சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்காக கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களுடன் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு லியோனல் மெஸ்ஸியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்கிறேன். முன்னாள் நீதிபதி அசிம் குமார் ராய் குழுவின் தலைவராக இருப்பார். இந்தக் குழுவில் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு முழு சம்பவம் குறித்தும் விரிவான விசாரணை நடத்தும். இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். எதிர்காலத்தில் இந்த சம்பவம் நிகழாமல் தடுப்பதற்கான வழிகளையும் இந்தக் குழு கண்டுபிடிக்கும்” என்று தெரிவித்தார்.