Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.. அலறும் இணையம்!

Shah Rukh Khan Meets Lionel Messi in Kolkata: மெஸ்ஸி சிலையை திறந்த பின், அங்கிருந்தவர்கள் அவருடன் போட்டிபோட்டுக் கொண்டு  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தவகையில், ஷாருக்கானும் தனது மகனுடன் வரிசையில் பொறுமையாக காத்திருந்து மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.. அலறும் இணையம்!
மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Dec 2025 12:03 PM IST

கொல்கத்தா, டிசம்பர் 13: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தாவிற்கு வருகை தந்துள்ள கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் ஆவார். இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடந்த 2022ல் ‘FIFA’ உலக கோப்பை வென்றது. இந்நிலையில், ‘கோட் இந்​தியா டூர்’ என்று அழைக்கப்படும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவருடன், அவரது அணி வீரர் லூயிஸ் சுவாரஸ்ஸும், அர்ஜென்டினா அணி வீரர் ரோட்ரிகோ டி பாலும் வருகை தந்துள்ளனர். அந்தவகையில், இன்று அதிகாலை தனிப்பட்ட விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்த, அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ALSO READ: ஆஹா சொல்ல வைத்த ஐசிசி.. ரூ. 100தான்! 2026 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விவரம் வெளியீடு!

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு:

இதற்காக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி, அவரது வருகையை காண்பதற்காக ஒவ்வொரு மணி நேரத்தையும் எண்ணி காத்துக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, அதிகாலை 2:26 மணிக்கு மெஸ்ஸியின் தனிப்பட்ட விமானம் தரையிறங்கியவுடன், விமான நிலையம் அலறல் சத்ததால் வெடித்தது. தொடர்ந்து, அந்த பகுதியே அதிரும் அளவுக்கு “மெஸ்ஸி! மெஸ்ஸி! என கோஷம் எழுப்பி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்:

தொடர்ந்து, இன்று காலை 10.30 மணிக்கு உலக கோப்பை தாங்கிய மெஸ்ஸியின், 70 அடி உயரமுள்ள முழு உருவச்சிலையை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் கலந்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து, மெஸ்ஸி சிலையை திறந்த பின், அங்கிருந்தவர்கள் அவருடன் போட்டிபோட்டுக் கொண்டு  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தவகையில், ஷாருக்கானும் தனது மகனுடன் வரிசையில் பொறுமையாக காத்திருந்து மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ALSO READ: ஐபிஎல் ஏலத்தில் முதலில் எடுக்கப்படும் 6 வீரர்கள்.. விவரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ, போட்டோக்கள்:

இரு பெரும் நட்சத்திரங்களும் சந்திக்கும் இந்த நிகழ்வுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அந்தவகையில், இந்த சந்திப்பு நிகழ்ந்ததும், அது குறித்த புகைப்படங்களும் , வீடியோக்களும் சமூக வலைதளங்களில் காட்டித்தீ போல பரவி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களில், மெஸ்ஸி புன்னகையுடன் ஷாருக்கானுடன் கை குலுக்குவதும், இருவரும் வாழ்த்துக்கூறிய பின், கூலாக புகைப்படம் எடுத்துக்கொள்வதுமாக உள்ளனர். அப்போது, ஷாருக்கானின் இளைய மகனும் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.