Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.. நீடிக்கும் பதற்றம்.. கொல்கத்தாவிற்கு ‘கறுப்பு நாள்’ என ரசிகர்கள் வேதனை!!

மெஸ்ஸிக்கு மிக அருகில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற விருந்தினர்கள் இருந்ததால், பார்வையாளர் பகுதியிலிருந்து ரசிகர்களால் அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இதன் விளைவாக ஏற்பட்ட கோபமே, நாற்காலிகள் மற்றும் பாட்டில்களை தூக்கி வீசவதற்கு வழிவகுத்தது, இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மெஸ்ஸியை அங்கிருந்து அவசரமாக அழைத்துச் செல்லும் கட்டாயமும் நேர்ந்தது.

மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.. நீடிக்கும் பதற்றம்.. கொல்கத்தாவிற்கு ‘கறுப்பு நாள்’ என ரசிகர்கள் வேதனை!!
ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Dec 2025 14:43 PM IST

கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ரசிகர்கள் மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருக்கும் மெஸ்ஸி, ‘கோட் இந்​தியா டூர்’ திட்டத்தின்படி, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்திற்கு இன்று காலை 11.15 மணிக்கு வருகை தந்தார். அங்கு மெஸ்ஸியை காண காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதற்காக ரூ.5000 முதல் 25,000 வரை ரசிகர்களிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டணம் வசூலித்துள்ளனர். இந்தநிலையில், மைதானம் வந்த மெஸ்ஸியை சூழ்ந்துகொண்ட பிரபலங்கள், அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துகொள்வதும், ஆட்டோகிராஃப் வாங்குவதுமாக இருந்தனர்.

மைதானத்தை வளம் வந்த மெஸ்ஸி:

இந்நிலையில், ரசிகர்களுக்கு கையசைத்தபடி சற்று தூரம் மைதானத்தில் மெஸ்ஸி வளம் வந்தார். அப்போதும் அவரைச் சுற்றி பிரபலங்கள், ஊடகங்கள், பாதுகாவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்துகொண்டனர். இதனால், மைதானத்தில் இருந்தவர்கள் சரியாக மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை எனத் தெரிகிறது. அதோடு, அவர் மைதானத்தை முழுவதும் சுற்றி வருவதாக இருந்துள்ளது. ஆனால், அதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த ரசிகர்கள் தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசத் தொடங்கியுள்ளனர்.

பாதியில் வெளியேற்றப்பட்ட மெஸ்ஸி:

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மெஸ்ஸி மைதானத்தில் இருந்த உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதனால், மேலும் ஆத்தரமடைந்த ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீது கடும் கோபமடைந்தனர். தொடர்ந்து, மெஸ்ஸியை காண முடியாத ரசிகர்கள் மைதானத்தை நோக்கி சேர்களை தூக்கி வீசுவதும், அங்கு இருந்த மேஜைகளை தூக்கி எறிவதும், பாதகைகளை கிழிப்பதும் என ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மைதானத்தில் ஷாருக்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மைத்திற்கு வருகை தந்த போதும், அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், அவர்கள் வெளியே வராமல் அப்படியே திரும்பிச்சென்றனர். அதேபோல், மைதானத்திற்கு வந்துகொண்டிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாதியிலேயே திரும்பிச்சென்றுள்ளார்.

மைதானத்திற்குள் வராத ஷாருக்கான்:

இதன் காரணமாக, ரசிகர்கள் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. ஏனெனில், மெஸ்ஸியுடன், ஷாருக்கானையும் காணலாம் என்ற ஆர்வத்திலேயே அவர்கள் இருந்துள்ளனர். ஆனால், அதுவும் நடக்காமல் போனதால், கடும் அதிருப்திக்கு ஆளாகினர். இதனால், அவர்கள் மைதனாத்தை சூறையாட தொடங்கினர்.

தண்ணீர் பாட்டில், சேர்களை வீசிய ரசிகர்கள்:

கையில் கிடைத்த பொருட்களை தூக்கி மைதானத்திற்கு நடுவே வீசி வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது சேர்களை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தத் தொடங்கினர். இதையடுத்து, மைதானத்திற்குள் இருந்து ரசிகர்கள் பதறியடித்து வெளியே ஓடத்தொடங்கினர்.

கொல்கத்தாவிற்கு கறுப்பு நாள்:

ஆனால், அவர்கள் வெளியேற சென்றாலும் அங்கும் பதற்றமான நிலை தான் நீடித்து வந்தது. அவர்கள் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தங்களது டிக்கெட் பணத்தை திரும்பத் தர வேண்டும் என கோஷம் எழுப்பி வருகின்றனர். அதோடு, இந்த நிகழ்ச்சி ஓரு மோசடி சம்பவம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதோடு, கொல்கத்தாவிற்கு இன்று கறுப்புநாள் என்றும் அவர்கள் வேதனை வெளிப்படுத்தினர்.

மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி:

இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில், சால்ட் லேக் மைதானத்தில் இன்று காணப்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகினேன். தங்களுக்குப் பிடித்த கால்பந்து வீரர் மெஸ்ஸியை காணக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மைதானத்திற்கு வந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.