தனது தனித்துவமான ஸ்டைலால், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் அவரது நடிப்பில் மெஹா ஹிட்டான படையப்பா திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்தப் படத்தில் நீலாம்பரி என்றதும், ரசிகர்கள் மனதில் சட்டென வருவது, ரம்யா கிருஷ்ணன் தான். இந்த நிலையில் படையப்பா படம் தொடர்பான, சுவாரசியமான தகவல் ஒன்றை ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.