Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GOAT India tour 2025: இந்தியா வந்தடைந்தார் மெஸ்ஸி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.. வீடியோ!

Lionel Messi's GOAT India tour 2025: கொல்கத்தாவில் இன்று காலை 10.30 மணிக்கு உலக கோப்பை தாங்கிய மெஸ்ஸியின், 70 அடி உயரமுள்ள முழு உருவச்சிலையை இணைய வழியில் அவர் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

GOAT India tour 2025: இந்தியா வந்தடைந்தார் மெஸ்ஸி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.. வீடியோ!
மெஸ்வி இந்தியா வந்தடைந்தார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Dec 2025 08:52 AM IST

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று (டிச.,13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் ஆவார். இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடந்த 2022ல் ‘FIFA’ உலக கோப்பை வென்றது. இந்நிலையில், ‘கோட் இந்​தியா டூர்’ என்று அழைக்கப்படும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவருடன், அவரது அணி வீரர் லூயிஸ் சுவாரஸ்ஸும், அர்ஜென்டினா அணி வீரர் ரோட்ரிகோ டி பாலும் வருகை தந்துள்ளனர். கொல்கத்தா விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து இ.எம் பைபாஸில் உள்ள நட்சத்திர விடுதியில் மெஸ்ஸி தங்கியுள்ளார்.

ALSO READ: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு:

இதனிடையே கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி, அவரது வருகையை காண்பதற்காக ஒவ்வொரு மணி நேரத்தையும் எண்ணிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து, அதிகாலை 2:26 மணிக்கு மெஸ்ஸியின் தனிப்பட்ட விமானம் தரையிறங்கியவுடன், விமான நிலையம் அலறல் சத்ததால் வெடித்தது. தொடர்ந்து, அந்த பகுதியே அதிரும் அளவுக்கு “மெஸ்ஸி! மெஸ்ஸி!” என கோஷம் எழுப்பி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மம்தா, ஷாருக், கங்குலியை சந்திக்கும் மெஸ்ஸி:

தொடர்ந்து, இன்று காலை 10.30 மணிக்கு உலக கோப்பை தாங்கிய மெஸ்ஸியின், 70 அடி உயரமுள்ள முழு உருவச்சிலையை இணைய வழியில் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பின்னர், 11.25 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு, அவரை முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாரூக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர், அங்கு நட்பு ரீதியாக நடக்கும் கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.

பிற்பகல் ஐதராபாத் செல்கிறார்:

இதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி, அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸியுடன் விளையாடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக ரேவந்த் ரெட்டி பயிற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.

ALSO READ: U19 ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. இலவசமாக நேரடி போட்டியை எப்படிப் பார்ப்பது?

நாளை மும்பை செல்கிறார்:

அதன்பின்னர், டிசம்பர் 14ம் தேதி மும்பை செல்லும் மெஸ்ஸி, பிற்பகல் 3.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், மாலை 5 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் கோட்:

இதையடுத்து, டிசம்பர் 15ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர், அருண் ஜெட்லி மைதானத்தில் மினெர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.