சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், சமீபத்தில் உலகின் மிக நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விமானப் போக்குவரத்து வரலாற்றில், புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஷாங்காயிலிருந்து, பியூனஸ் அயர்ஸுக்கு செல்லும் இந்த விமானம், மொத்தம் 19,631 கிலோமீட்டர் தூரத்தை, 25 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றடையும். எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் மாற்றத்திற்காக, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஒருமுறை மட்டும் நிற்கும். ஆண்டு முழுவதும் வாரத்திற்கு இரண்டு முறை, இந்த விமான சேவையை இயக்கப்போவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.