திருமலையில் இருக்கும் திருப்பதி கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த வைகுண்ட ஏகாதசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி என்பது பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித நாளாகும்.