Virat Kohli: லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய கோலி.. மெஸ்ஸியுடன் மீட்டிங்கா..?
Virat Kohli - Lionel Messi: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று அதாவது 2025 டிசம்பர் 13ம் தேதி கொல்கத்தா வந்தடைந்தார். தொடர்ந்து, இரவு ஹைதராபாத்திலும், நாளை மறுநாள் மும்பைக்கும் செல்வார். இந்தநிலையில், கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் மெஸ்ஸி 22 நிமிடம் மட்டுமே இருந்தார்.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவிற்கு நேரடியாக வந்த மெஸ்ஸி, தற்போது ஹைதராபாத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். மேலும், இவர்கள் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லண்டனில் வசிக்கும் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பிறகு, லண்டன் சென்றார்.
ALSO READ: மெஸ்ஸியை சந்தித்த ஷாருக்கான்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.. அலறும் இணையம்!




இந்தியா திரும்பிய விராட் கோலி:
VIRAT KOHLI IS BACK…!!!! 🔥#ViratKohli #ViratKohli𓃵 pic.twitter.com/F7LwJaodKv
— imsrikanth (@imSkanthm) December 13, 2025
மும்பை கலினா விமான நிலையத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று அதாவது 2025 டிசம்பர் 13ம் தேதி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மெஸ்ஸியும் அதே நேரத்தில் இந்தியாவில் இருப்பதால், கோலி மற்றும் மெஸ்ஸி இடையேயான சந்திப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொல்கத்தாவில் கலவரம்:
✨𝐀𝐧 𝐔𝐧𝐟𝐨𝐫𝐠𝐞𝐭𝐭𝐚𝐛𝐥𝐞 𝐌𝐨𝐦𝐞𝐧𝐭 ✨
Football’s Greatest Of All Time Lionel Messi in Hyderabad. pic.twitter.com/5z5gXCKbG9
— Congress (@INCIndia) December 13, 2025
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று அதாவது 2025 டிசம்பர் 13ம் தேதி கொல்கத்தா வந்தடைந்தார். தொடர்ந்து, இரவு ஹைதராபாத்திலும், நாளை மறுநாள் மும்பைக்கும் செல்வார். இந்தநிலையில், கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் மெஸ்ஸி 22 நிமிடம் மட்டுமே இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த இந்திய கால்பந்து ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் புகுந்து நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர். இதன்பிறகு, போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
ALSO READ: கிளம்பிய மெஸ்ஸி.. கொல்கத்தா ஸ்டேடியத்தில் கலவரம்.. மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!
கோலி மெஸ்ஸியை சந்திப்பாரா..?
விராட் கோலி இந்தியா திரும்பியதும், மெஸ்ஸியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு இந்திய விளையாட்டு உலகிற்கு ஒரு உத்வேகமாக இருக்கும். இருப்பினும், இந்த சந்திப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இந்த சிறப்பு தருணத்திற்காக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.