சீனாவில் உள்ள ஒரு மிருகக் காட்சியகத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நிகழ்ச்சியின் போது, தனது விருப்பமான உணவான காரட்டின் மணம் அடித்ததும் கட்டுப்பாடு இழந்த ஒரு கரடி, தன்னை பராமரித்து வந்த ஊழியரை தாக்கியது. மிருகக் காட்சியகத்தின் பிற பணியாளர்கள் ஓடி வந்து நாற்காலிகளும் கம்புகளும் பயன்படுத்தி கரடியை அப்புறப்படுத்த முயன்ற காட்சிகள் பார்வையாளர்களை உண்மையிலேயே பயமுறுத்தின.