அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தவறால், நடந்த பயங்கர விபத்து, அங்குள்ள சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 28 வயதான பாதல் துலாரியா, டெஸ்லா மாடல் 3 காரை 240 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி கொண்டிருந்ததாக போலீஸ் தெரிவித்தனர். . அந்த சமயம் அவர் மது போதையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரது கார், மற்றொரு காரின் பின்புறத்தில் மோதியது. இந்த நிலையில் அந்த காரில் பயணித்த அலிக்ஸ் மேரி ஸ்பார்க்ஸ் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.