AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பந்த் அப்படி செய்திருக்க கூடாது, இது மிகவும் மோசமான செயல் – அஸ்வின் கடும் விமர்சனம்

RCBvLSG : ஐபிஎல் 2025 தொடரின் 70வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரிஷப் பந்த்தின் செயலை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பந்த் அப்படி செய்திருக்க கூடாது, இது மிகவும் மோசமான செயல் – அஸ்வின் கடும் விமர்சனம்
அஸ்வின் - ரிஷப் பந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 May 2025 17:56 PM IST

ஐபிஎல் 2025 (IPL)தொடரின் 70வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியின் மூலம் அந்த 19 புள்ளிகளைப் பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது. இந்த போட்டியில் லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஆனால் மூன்றாவது நடுவர் அதை நாட் அவுட் என்று அறிவித்தார். இதற்கிடையில், லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார்.  மேல்முறையீட்டை வாபஸ் பெற்ற பந்தின் நடவடிக்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அஸ்வின் விமர்சித்தார். இது திக்வேஷை அவமதிப்பது போன்றது என்று அஸ்வின் குறிப்பிட்டார்.

ரிஷப்  பந்த்தின் செயலை விமர்சித்த அஸ்வின்

 

திக்வேஷ் கேட்ட ரன்-அவுட் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றிருக்கக் கூடாது என்று அஷ்வின் கருத்து தெரிவித்தார். இந்தப் போட்டி லக்னோவுக்கு முக்கியமற்றதாக இருக்கலாம். பந்த் தனது மேல்முறையீட்டை வாபஸ் பெறும் வரை எல்லாம் நன்றாக இருந்தது. இருப்பினும், பந்த் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதை அவரது திறமை என்று வர்ணனையாளர்கள் விவரித்ததாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சுட்டிக்காட்டினார். அது அவுட்டா இல்லையா என்பதை முடிவு செய்வது மூன்றாவது நடுவரின் பொறுப்பாகும். பந்த் தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றிருக்கக் கூடாது. பந்த் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் அருமையான சதம் அடித்தார், கிரிக்கெட்டில் அவர் சிறந்த சாதனைகளைச் செய்வார் என்பது எனக்குத் தெரியும். அவரது ஆட்டத்தை காண இங்கிலாந்து தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நான் பந்தின் பெரிய ரசிகன் என்றும் கூறினார். மேலும், திக்வேஷ் ரதி என் உறவினர் அல்ல, என் நண்பரும் அல்ல. ஆனால் இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு பந்து வீச்சாளரை மிகவும் காயப்படுத்துகிறீர்கள். அது அவரை மிகவும் பாதிக்கும் என்று பேசினார்.

ரன் வேட்டையில் இறங்கிய கேப்டன் ரிஷப் பந்த்

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ரன் வேட்டையில் இறங்கினார். பெங்களூரு அணி வீரர்களால் அவரது ரன் வேட்டையை நிறுத்த முடியவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த நிலையில் 61 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டிரிகள் என 118 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் சார்பாக நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ஷெப்பர்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Follow Us