AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ZIM: இந்தியா – ஜிம்பாப்வே 2வது டி20 போட்டி எப்போது..? ​​எத்தனை மணிக்கு தொடங்கும்?

IND vs ZIM 2nd T20 Date and Time: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே (IND vs ZIM) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி எப்போது நடைபெறும், இந்தியாவில் அது எத்தனை மணிக்குத் தொடங்கும், எந்த சேனல் அதை நேரலையாக ஒளிபரப்பும், மற்றும் எந்த செயலியில் அது நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

IND vs ZIM: இந்தியா – ஜிம்பாப்வே 2வது டி20 போட்டி எப்போது..? ​​எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jul 2026 18:12 PM IST

ஷ்ரேயஸ் ஐயர் தலைமையின் கீழ் இந்திய அணி (Indian Cricket Team) இறுதியாக தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று, 6 போட்டிகள் கொண்ட தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 18 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தை அடித்தார். இப்போது, ​​ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டியிலும், கேப்டனாக தனது முதல் தொடரிலும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். அந்தவகையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே (IND vs ZIM) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி எப்போது நடைபெறும், இந்தியாவில் அது எத்தனை மணிக்குத் தொடங்கும், எந்த சேனல் அதை நேரலையாக ஒளிபரப்பும், மற்றும் எந்த செயலியில் அது நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதம் – ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்திய இந்தியா

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி எப்போது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி, நாளை அதாவது 2026 ஜூலை 25ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான 2வது டி20 போட்டி எங்கே நடைபெறுகிறது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும்.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி எத்தனை மணிக்குத் தொடங்கும்?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்குத் தொடங்குகிறது. டாஸ் மாலை 4 மணிக்கு நடைபெறும்.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை எந்த சேனல் நேரலையில் ஒளிபரப்பும்?

இந்தியா – ஜிம்பாப்வே போட்டியின் நேரடி ஒளிபரப்பு யுனைட்8 ஸ்போர்ட்ஸ் டிவி சேனலில் நடைபெறும்.

இந்தியா – ஜிம்பாப்வே 2வது டி20 போட்டியின் நேரலை ஒளிபரப்பு விவரங்கள்

இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 2வது டி20ஐ போட்டியின் நேரலை ஒளிபரப்பு ஃபேன் கோட் செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.

ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறதா? வெளியான அட்டவணை!

இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, ரின்கு சிங், ஷிவம் துபே, அபிஷேக் சர்மா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஹர்ஷ் யஷ் துபே, சூர்யான் ஷர்தாவ், மேய்.

ஜிம்பாப்வே அணி:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், தனகா சிவாங்கா, பென் குரான், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகர்வா, நியூமன் நயமுரி, மில்டன் ஷும்பா, மில்டன் ஷும்பா.

Follow Us