IND vs ZIM: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா.. தடை போடுமா ஜிம்பாப்வே..? இன்று மோதல்!
IND vs ZIM 2nd T20 Playing 11 Prediction: முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாவது டி20 போட்டியிலும் நிர்வாகம் அதே ஆடும் லெவனே களமிறங்கலாம். யஷ் தாக்கூரும் தனது சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருப்பாரா அல்லது அசோக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்பது பிளேயிங் லெவன் அறிவிப்பின்போதே தெரியும்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே (IND vs ZIM) அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி 2026 ஜூலை 25 ஆம் தேதியான இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டாவது போட்டியும் ஹராரேவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் (Indian Cricket Team) பயிற்சியாளராக சென்றுள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இவரது பயிற்சியின் கீழ் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.
ALSO READ: இந்தியா – ஜிம்பாப்வே 2வது டி20 போட்டி எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிகளவில் இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. மயங்க் யாதவ், அசோக் சர்மா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். 2வது டி20 போட்டியில் இந்திய அணி எந்த ஆடும் லெவனை களமிறக்கக்கூடும் மற்றும் எந்த ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.




ஆடும் லெவனில் எத்தனை மாற்றங்கள் இருக்கும்?
முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாவது டி20 போட்டியிலும் நிர்வாகம் அதே ஆடும் லெவனே களமிறங்கலாம். யஷ் தாக்கூரும் தனது சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருப்பாரா அல்லது அசோக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்பது பிளேயிங் லெவன் அறிவிப்பின்போதே தெரியும்.
பிட்ச் ரிப்போர்ட்:
ஹராரே பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் நல்ல ஆதரவாக உள்ளது. முதல் போட்டியில், பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் நல்ல பவுன்ஸ் கிடைத்தது. மேலும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், மயங்க் யாதவின் பந்துகளை கஷ்டப்பட்டே பிடித்தார். இது போட்டியில் விறுவிறுப்பையே கொடுத்தது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இங்கு 170-180 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோராகக் கருதப்படுகிறது.
ALSO READ: பிறந்தநாள் தொடர்பு… இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக நிகழ்ந்த சாதனை.. என்ன தெரியுமா?
போட்டி கணிப்பு
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த 13 போட்டிகளில் ஜிம்பாப்வே இந்தியாவை மூன்று முறை தோற்கடித்துள்ளது. இருப்பினும், இங்கு நடந்த கடைசி 5 போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 70-30 சதவீத வாய்ப்பு உள்ளது.
2வது டி20 போட்டிக்கான இந்தியாவின் சாத்தியமான ஆடும் லெவன்:
அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்