Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

CSK’s IPL 2025 Struggles: சேஸிங்னா பயம்! பேட்டிங்னா நடுக்கம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக அதிக ரன்னை துரத்தியது எப்போது?

Chennai Super Kings Batting: ஐபிஎல்லில் கடைசியாக 180க்கு மேற்பட்ட ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமாக துரத்தியது மே 27, 2018ம் ஆண்டில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில்தான். அன்றைய போட்டியில் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3வது சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

CSK’s IPL 2025 Struggles: சேஸிங்னா பயம்! பேட்டிங்னா நடுக்கம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக அதிக ரன்னை துரத்தியது எப்போது?
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Apr 2025 16:03 PM IST

ஐபிஎல் 2025ல் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அது ரன் சேஸிங்தான். ஒவ்வொரு போட்டியின் ரன் சேஸிங்போதும் பேட்டிங்கில் சொதப்பும் சென்னை பேட்ஸ்மேன்கள் கடைசியில் போட்டியை கைவிட்டு விடுகின்றனர். 2025 ஏப்ரல் 8ம் தேதியான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு (Punjab Kings) எதிராக 220 என்ற இலக்கை துரத்த முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதேபோல், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படியாக தோல்வியை சந்திந்தது.

ஐபிஎல்லில் சிஎஸ்கே கடைசியாக 180+ இலக்கை வெற்றிகரமாக துரத்தியது எப்போது..?

ஐபிஎல்லில் கடைசியாக 180க்கு மேற்பட்ட ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமாக துரத்தியது மே 27, 2018ம் ஆண்டில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில்தான். அன்றைய போட்டியில் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3வது சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். மேலும், அதே போட்டியில் அம்பத்தி ராயுடு 53 பந்துகளில் 82 ரன்களும், எம்.எஸ்.தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சேஸ் செய்த அதிகபட்ச இலக்குகள்:

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி 206 ரன்களை சேஸ் செய்தது. அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 206 ரன்களை துரத்தியது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச சேஸிங் வெற்றியாகும்.

இதனை தொடர்ந்து, மீண்டும் 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 203 என்ற இலக்கை துரத்தி அசத்தியது. இதற்கு முன்பு, கடந்த 2010ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 193 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் வருடமாக 2008ம் ஆண்டு அப்போதையை டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்கு எதிராக 188 ரன்களை துரத்தியது. இதற்கு முன்னும், பின்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டிய மிகப்பெரிய இலக்கு என்பது எதுவும் இல்லை.

இலக்கை துரத்தினால் தோல்விதான்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலமே பந்துவீச்சுதான். எப்படிப்பட்ட ரன்களையும் எளிதாக எதிரணியை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுவிடும். இருப்பினும், கிடைத்த தகவலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 180 ப்ளஸ் ரன்களை எப்போதெல்லாம் துரத்துகிறதோ அப்போதெல்லாம் தோல்வியை சந்திக்கிறது. கடைசியாக நடந்த 180 ப்ளஸ் அதிகமான ரன் சேஸிங் 11 போட்டிகளில் சென்னை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 180 ப்ளஸ் ரன்களை துரத்தவில்லை என்றாலும், 2018, 2021 மற்றும் 2023 ஆகிய மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.